அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு. புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படுமா? 

 எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு அரசு பள்ளிகளில் கூடுதலாக இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூடுதல் ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்கள்.

 இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 5.18 லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். 7.5% இட ஒதுக்கீட்டால் 405 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்களை அதிகரிக்குமாறு தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் சங்கம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.