சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின்பே பொதுத்தேர்வுகள்?- தமிழக அரசு திட்டமிடுவதாகத் தகவல் வெளியாகிறது - முழு விவரம்


 


தமிழகசட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு பள்ளி பொதுத்தேர்வுகளை நடத்தும் அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இது தொடர்பான கால அட்டவணையை தேர்வுத் துறை அரசிடம் சமர்ப்பித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 கொரோனா வைரஸ் தொற்றால் பள்ளிக்கல்வியில் கற்றல் கற்பித்தல் பணி ஏற்பட்டுள்ள பாதிப்பு பள்ளிகள் திறக்க தாமதம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆராய்ந்து பரிந்துரை வழங்க பள்ளிக்கல்வித் துறை முன்னாள் ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் தலைமையில் 16 - பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் பெற்றோர் மற்றும் கல்வியாளர்களிடம் இருந்து கருத்துக்கள் பெறப்பட்டது. அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட முதல் கட்ட பரிந்துரை அறிக்கை, முதல்வரிடம் கடந்த ஜூலை 14-ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

 இணையவழிக் கல்வி நேரக் கட்டுப்பாடு விதித்தால் மாணவர் சேர்க்கை பணிகள் உள்ளிட்ட பரிந்துரைகள் இடம் பெற்றிருந்தது. அதை தொடர்ந்து பள்ளிகள் திறப்பு மற்றும் பாட அளவு குறைப்பு, பொது தேர்வு தொடர்பான இரண்டாம் கட்ட அறிக்கை நிபுணர் குழு கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த அறிக்கையில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு 10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தலாம் என்று பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் கல்வி காட்டிலும் மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி கற்பித்தல் முறை அவசியம் என்பதால் மார்ச்,ஏப்ரல் மாதங்களில் பொதுத் தேர்வை நடத்த முடியாது என்ற சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் 10 ,11 ,12-ஆம் வகுப்பு பொது தேர்வை நடத்தலாம் என்று அரசுக்கு பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.