நிவர் புயல் காரணமாக நாளை பொது விடுமுறை தமிழக அரசு அறிவித்துள்ளது.

  நிவர் புயல் 12 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறி அடுத்த 12 மணி நேரத்தில் இது அதி தீவிர புயலாக வலுவடைவதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 இந்த நிலையில் கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 5 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளதாகவும் தற்போது புதுச்சேரிக்கு 370 கிலோ மீட்டர் தொலைவிலும் சென்னைக்கு 420 கிலோ மீட்டர் தொலைவிலும் நிவர்புயல் மையம் கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 இந்நிலையில் நாளை பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. அனைத்து வங்கிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.