திருவண்ணாமலை தீபத்திருவிழா - இந்தாண்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது !



திருவண்ணாமலை கோவிலில் தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது தமிழகம் மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.ஆனால் இந்த ஆண்டு கூரான தொற்று காரணமாக தீபத் திருவிழாவில் கலந்துகொள்ள பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.


திருவண்ணாமலையில் வரும் 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் தீபத்திருவிழா ஆனது 29-ஆம் தேதி வரை நடக்கிறது. திருவிழாவின் கடைசி நாளான இருபத்தி ஒன்பதாம் தேதி அதிகாலை பரணி தீபமும் மாலையில் மகா தன தீபமும் ஏற்றப்படும். இந்நிலையில் கோவிலினுள் நடக்கும் வழக்கமான பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் பொதுமக்கள் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.


இவைத்தவிர திருவிழா நாட்களில் தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இதற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு பெற வேண்டும். திருவிழாவின் பத்தாம் நாளான தீபத் திருவிழாவின்போது பக்தர்கள் யாரும் கோவிலின் உள் நுழையவும், மலை ஏறவும் இந்த ஆண்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.