வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் சேர்க்க வேண்டுமா தேவையான ஆவணங்கள் என்னென்ன தெரியுமா? 

 தமிழகத்தில் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் நவம்பர் 16ஆம் தேதி நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வெளியிட்டனர்.இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம் பெறவில்லை என்றால் இம் மாதம் நவம்பர் மாதம் 21 மற்றும் 22 ஆகிய நாட்களிலும் டிசம்பர் மாதம் 12 மற்றும் 13 தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது நீக்குவது திருத்தம் செய்வது தொடர்பான சிறப்பு முகாமில் அந்தந்தபகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடிகளில் நடைபெறும்

 இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள். ஜனவரி மாதம் 20ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது .அதற்கு முன்பாகவே சிறப்பு முகாம்கள் மூலம் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், வாக்காளர் அட்டையில் திருத்தம் மேற்கொள்ள விரும்புவோர் இந்த நான்கு நாள் நடைபெறும் சிறப்பு முகாம்களை பயன்படுத்தி கொள்ளுமாறு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

 உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை நீங்கள் அறிந்து கொள்ள www.elections.gov.inஎன்ற இணையதளம் மூலமாகவும் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தேவையான ஆவணங்கள்.

* கேபிள் பில்*

* ஆதார் கார்டு அடையாளச் சான்று

* பான் கார்டு

* ரேஷன் கார்டு

* பாஸ்போர்ட் வங்கி கணக்கு புத்தகம் போட்டோவுடன்

* பத்தாம் வகுப்பு சான்றிதழ்

* மாணவர் அடையாள அட்டை

* ஆதார் கார்டு இதில் ஏதாவது ஒரு நகல்.