தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு ஒத்திவைப்புகொரோனா தொற்றின் காரணமாக ஏழு மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட வில்லை. இதன் காரணமாக 9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் நவம்பர் 16ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என முதலில் அறிவிப்பு வெளியானது.

 இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.இதன் காரணமாக நவம்பர் 9ஆம் தேதி பெற்றோர்களிடையே கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பெரும்பாலான பெற்றோர்கள் தற்போது பள்ளிகளை திறக்க வேண்டாம் என தெரிவித்தனர்.

 இந்நிலையில் பள்ளிகள் திறக்க தமிழக அரசு ஒத்தி வைக்கப் படுவதாக அறிவித்துள்ளது. சூழ்நிலைக்கேற்ப பள்ளிகள் திறப்பு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதேபோல் கல்லூரிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுஆனால் முதுநிலை இறுதியாண்டு பயிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கு வரும் டிசம்பர் இரண்டாம் தேதி வகுப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதர வகுப்பு மாணவர்களுக்கு கல்லூரி திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.