ஊதிய உயர்வு:தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் கணினி உதவியாளர்களுக்கு!

  நாட்டில் உள்ள அனைத்து கிராமப்புறங்களிலும் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 இந்த திட்டத்தில் பணிபுரியும் கணினி உதவியாளர்கள் மாத ஊதியத்தை உயர்த்தி வழங்க அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது .இத் திட்டத்தில் பணியாற்றும் கணினி உதவியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்றும் ரூபாய் 12000ஆயிரம் ஊதியத்தை ரூபாய் 14000 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் 1843 பேர் பயனடைவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற பல தகவல்களை தெரிந்து கொள்ள தமிழ்ச் செய்திவளை தளத்துடன் இணைந்திருங்கள் நன்றி!