தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு எச்சரிக்கை எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

 தமிழகம் முழுவதும் பரவலாக வடகிழக்கு மழை  பெய்ய தொடங்கியுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அடுத்த வாரத்தில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* புதுக்கோட்டை,

* நாகை,

* சிவகங்கை

* ராமநாதபுரம்

* நெல்லை

* தென்காசி

* தூத்துக்குடி

* கன்னியாகுமரி

 ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் வட தமிழகம் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 கடல் சீற்றத்துடன் காணப்படும் எனவும் எனவே மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.