ஆபரண தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பு:

 சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 304 ரூபாய் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 304 ரூபாய் அதிகரித்து 38 ஆயிரத்து 568 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கிராமுக்கு 38 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 821 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ஒரு ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 68 ரூபாய் 40 காசுகளாக இன்று விற்பனை செய்யப்படுகிறது.