பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு! 




கொரோனா தொற்றின் காரணமாக கடந்த சில மாதங்களாக அனைத்து பள்ளிகளும் மூடிய நிலையில் உள்ளன.

. கோவாவில் நவம்பர் 21 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அம்மாநில அரசு இன்று வெளியிட்டது. கோவாவில் கொரோனா தொற்று பாதிப்பால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் நவம்பர் 21-ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக கோவா மாநில அரசு அறிவித்துள்ளது .அதனை ஒட்டி பள்ளிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அம்மாநில அரசு இன்று வெளியிட்டுள்ளது .

ஒரு வகுப்பில் 12க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருக்கக்கூடாது என்றும் ஒற்றை சாளர முறையில் வகுப்புகள் நடத்த வேண்டும் என்றும் பள்ளிகளுக்கும் அம்மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது. வகுப்பறையில் குறைந்தபட்சம் ஒரு மாணவருக்கும் மற்றொரு மாணவருக்கும் இடையே 6 அடி தூரம் தனிநபர் இடைவெளியை பின்பற்றவும்அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 ஆய்வகங்களில் திறன் அடிப்படையிலான பயிற்சிக்கு பயிற்சி உபகரணங்களை பயன்படுத்துவதற்கும் முன்னும் பின்னும் மாணவர்கள் தங்கள் கைகளை தூய்மைப்படுத்தவும்  மற்றும் முக கவசம் அணிந்து கிருமிநாசினி கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் பள்ளிகளுக்கும் அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.