பட்டாசு வெடிக்க தடை - தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி அறிவிப்பு 


 

 டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை செய்து தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை செய்துள்ளது அது போன்று காற்று மாசுபாடு அதிகம் உள்ள மாவட்டங்களான நமது தமிழகத்தில் திருச்சி தூத்துக்குடி ஆகிய பகுதிகளிலும் பட்டாசுகளை வெடிக்க கடுமையான கட்டுப்பாடுகளை நமது தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்துள்ளது இந்தியா முழுவதுமே பட்டாசுகளை வெடிக்க தடை விதிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது..

  அந்த வழக்கில் தற்போது தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது அதன்படி டெல்லியில் வரும் நவம்பர் 30-ஆம் தேதி வரை பட்டாசு வெடிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது காற்று மாசு அதிகம் காரணமாக அனைத்து நகரங்களுக்கும் இது பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது..

 காற்று மாசு அதிகமாக உள்ள பகுதிகளில் இரண்டு மணி நேரம் மட்டுமே வெடிக்கும் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது இந்த உத்தரவுகளை பின்பற்றாவிட்டால் பட்டாசுகளை விற்பனை செய்தால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் பட்டாசுகளை வெடித்தால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் நமது பசுமை தீர்ப்பாயம் கூறியுள்ளது