9 வயது சிறுமிக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் பாராட்டு!

 


 

 கேந்திர வித்யாலயா பள்ளியில் நான்காம் வகுப்பு பயிலும் மாணவி இந்திரா இவர் தொழில்நுட்ப முறையை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பதிவிட்ட வீடியோ வை கண்டு பிரதமர் மோடி மிகவும் ரசித்ததாக சொல்லி இருக்கிறார். அவரின் அறிவுத் திறனைப் பாராட்டி ட்விட்டரில் அவர் பதிவு  சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

 கல்பாக்கத்தில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் இந்த சிறுமியின் தந்தை  அர்ஜுன் இவரது மகள் இந்திரா  ஒன்பது வயதான இந்திரா நகரில் பள்ளியில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீட்டு விலங்குகள் மற்றும் வனவிலங்குகளின் குறித்த வீடியோவை உருவாக்கியுள்ளார் .

இவர் பதிவில் வீட்டின் அருகில் இருக்கும் விலங்குகளான பசு யானை பாம்பு தேனி மற்றும் புலி போன்ற உயிரினங்கள் வருவதைப் போல ஆஃகுமென்ட் என்ற ரியாலிட்டி தொழில்நுட்ப முறையில் இவர் காட்டியுள்ளார். இந்த சிறுமி அந்த உயிரினங்களை குறித்து ஆங்கில மொழியிலும் மிகவும் அருமையாக விளக்கிப் பேசியிருக்கிறார் .இந்த வீடியோவை பெற்றோர்கள் உதவியோடு சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்டுள்ளார் 

.கடந்த செப்டம்பர் மாதம் இந்த பதிவை இவர் வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த நரேந்திர மோடி பார்த்து ரசித்துள்ளார். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீடியோவை உருவாகியுள்ள சிறுமியின் அறிவுத் திறனைப் பாராட்டி டுவிட்டரில் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பதிவிட்டுள்ளார் 

கல்பாக்கம் சிறுமிக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்த தகவல் தற்போது அப்பகுதியில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. தகவலறிந்து இப்பகுதியைச் சேர்ந்த பாஜகவினர் சிறுமியை நேரில் சென்று வாழ்த்து கூறி மிகவும் பாராட்டியதாக தெரிவிக்கிறார்கள். இது போன்ற பல தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ்ச் செய்திவளை தளத்துடன் இணைந்திருங்கள் நண்பர்களை நன்றி.!