பட்டாசு வெடிக்காத கிராமம் 48 வருடங்களாக என்ன காரணம்?

 

  தீபாவளி என்றாலே நம் அனைவரின் நினைவுக்கும் வருவது பட்டாசு தான் இவ்வாறான காலகட்டத்தில் பறவையின் நலனுக்காகவே வெடி போடாமல் தீபாவளி கொண்டாடும் இந்த கிராம மக்களுக்கு ஆட்சியர் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்

. சிவகங்கை மாவட்டம் வேடங்குடி குடி கிராமம் தான் இது. இந்த கிராமத்தில் 48 ஆண்டுகளாக கிராம மக்கள்  பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடி வருகின்றார்கள். திருப்பத்தூர் தொகுதிக்கு உட்பட்டு வருகிறது இந்த கிராமம் இந்த கிராமத்தில் பறவைகள் சரணாலயம் உள்ளது இதில் 217 வகையான பறவைகள் ஆண்டுதோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் அதாவது உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்து செல்கின்றது

.பறவைகளின் நலனுக்காகவே இந்த கிராம மக்கள் ஆண்டுதோறும் தீபாவளியை வெளி வெடிக்காமல் கொண்டாடி வருவது அனைவரையும் பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

 இந்த கிராம மக்களைப் போன்று நாம் இல்லை என்றாலும் குறைந்த அளவில் பட்டாசுகளை வெடித்து காற்று மாசை தடுப்போம் என அனைவரும் இந்த தீபாவளித் திருநாளில் உறுதியேற்போம். நன்றி!