நிவர் புயல் எச்சரிக்கை! தமிழகத்தில் வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு!

 தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில்  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரையில் நிவர் என்ற சூறாவளி புயல் உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

. தென் மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் சூறாவளிப் புயலாக மேலும் தீவிரமடைந்து தமிழ்நாடு புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நிவர் என்று பெயரிடப்பட்டுள்.ள இந்த புயலானது நவம்பர் மாதம் 25 ஆம் தேதி பிற்பகல் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்தர் அவர்கள் தெரிவித்துள்ளார்.