பிளஸ் 2 செய்முறை தேர்வு தேதியை அறிவித்து சிபிஎஸ்சி!

  2020 மற்றும் 2021 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு செய்முறைத் தேர்வுக்கான தற்காலிக தேதியை சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும் என்று வெளியான தகவல் ஏற்கனவே மறுத்து இருந்த சிபிஎஸ்இ நிர்வாகம் தனது மறுப்பை உறுதி செய்யும் வகையில் செய்முறைத் தேர்வுக்கான தற்காலிக தேதி இன்று அறிவித்துள்ளது. 

அதன்படி சிபிஎஸ்சிபன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு ஜனவரி 1-ஆம் தேதி முதல் பிப்ரவரி 8ஆம் தேதி வரை செய்முறை தேர்வுகள் நடைபெறும் என்றும் சரியான செய்முறை தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.