டிஎன்பிஎஸ்சி மற்றும் குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சிக்கு   விண்ணப்பிக்கலாம்! தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர்.

 


  அவர்கள் அறிக்கையின்படி தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையத்தில் தன்னார்வலர் பயிலும் வட்டம் மூலம் டிஎன்பிஎஸ்சி, மற்றும் குரூப்-1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தற்பொழுது ஆன்லைன் மூலம் நடந்துகொண்டு வருகிறது. இதில் சிறந்த பயிற்சி யாளர்களை கொண்டு பயிற்சி அளிப்பதுடன் மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட்டு இலவச பாட குறிப்புகளும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

 அதன்படி பயிற்சியில் சேர தற்போது 200 மாணவர்கள் தங்களுடைய பெயர்களை பதிவு செய்து உள்ளார்கள். பயிற்சி வகுப்புகள்  இந்த மாதம் 16 ஆம் தேதி முதல் துவங்க உள்ளது இதுவரை பயிற்சியில் சேர விண்ணப்பிக்காத மாணவர்கள் தற்போது விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகா அவர்கள் கூறியுள்ளார்.

 மேலும் பல விவரங்களை அறிந்துகொள்ள தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்  தொலைபேசி எண்கள் 04342 296118என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம் நன்றி!