வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் பெயர் நீக்க மனு அளிக்கலாம்  டிசம்பர் 15ம் தேதி வரை

 


 கரூர் மாவட்ட கலெக்டர் மலர்விழி அவர்கள் அறிவிப்பின் படி இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி கரூர் கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 2020 ஆம் ஆண்டிற்கான புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் நாளை மறுதினம் வெளியிடப்பட உள்ளது.

 அந்நாள் முதல் அடுத்த மாதம் டிசம்பர் 15ஆம் தேதி வரை வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பெயர் சேர்க்க நீக்க திருத்தம் செய்ய மற்றும் இடமாறுதல் செய்யவும் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர் உதவிக்கு வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்கள் அவர்களிடம்  மனுக்களை மக்கள் நேரில் சென்று அளிக்கலாம் என்று கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மலர்விழி அவர்கள் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் அனைவரையும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு  கேட்டுக் கொண்டுள்ளார்.நன்றி!