11 வயது சிறுமியின் துணிச்சல் 10 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தந்தையின் மீது புகார்: 

* கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன நிலையில் மாணவர்களின் நலன் கருதி அரசாங்கம் மாணவர்களுக்கு  உலர் உணவுப் பொருட்களை வழங்கி வருகிறது 

*.இது போன்று ஓடிசாவில் மதிய உணவிற்காக அரசு வழங்கிய பணத்தை பறித்துக் கொண்ட தந்தையின் மீது 10 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று மாவட்ட ஆட்சியரிடம் 11 வயது சிறுமி புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

* ஒடிசாவில் மாணவர்களின் மதிய உணவிற்கான அரிசி மற்றும் பணத்தை  அவர்களின் பெற்றோர்களின் வங்கிக் கணக்கில் அந்த அரசாங்கம் செலுத்தி வருகிறது. அதை தன்னிடம் தன் தந்தை கொடுக்க மறுப்பதாக ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி சங்கிதா சேத்தி தனது தந்தை மீது புகார் அளிக்க 10 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றுள்ளார்.

 *அரசின் சார்பில் கொடுக்கப்படும் உணவு பொருள் மற்றும் பணத்தை தனக்கு மீட்டுத்தருமாறு அவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன் தன் தாயார் இறந்து விட்ட நிலையில் அந்த சிறுமி தன் உறவினர் வீட்டில் தங்கி படித்து வருகிறார்.

* இந்தச் சிறுமியின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட ஆட்சித்தலைவர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த சிறுமிக்கு வாக்குறுதி அளித்தார். பிறகு அரசு வழங்கும் இலவச அரிசி மற்றும் பணத்தையும் சிறுமியின் வங்கி கணக்கில் செலுத்துவதற்கும் உத்தரவிட்டுள்ளார். இந்த சிறுமியின் இந்த துணிச்சலான செயல் அனைவரையும் வெகுவாக ஈர்த்துள்ளது. பல்வேறு தரப்பினரும் இந்த சிறுமியை தற்போது பாராட்டி வருகிறார்கள்.