தமிழக வரலாறு


தோற்றமும் வளர்ச்சியும்

          முதன்முறையாக இந்த உலகில் ஒரு செல் உயிரினம் தான் தோன்றியது. அதில் இருந்து படிப்படியாக பல உயிரினங்கள் தோன்றி அதிகமாக வளர்ச்சி அடைய ஆரம்பித்தது.

இந்த செல்களில் இருந்து தான் மனித இனம் உருவாகுவதற்கு 45 கோடி அதாவது கிட்டத்தட்ட 400 மில்லியன் வருடங்கள் ஆனது. இதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த செல் உருவாக்கி முதலில் குரங்காக இருந்து அதன் பிறகுதான் படிப்படியாக மனித இனம் உருவாக ஆரம்பித்தது. தமிழ் நாட்டில் ஏறத்தாழ 6000 ஆண்டுகளுக்கு மேல் மிகவும் பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது. இங்கு வாழ்கின்ற திராவிட இன மக்களின் தோற்றம் பல்வேறு கருத்துக்களை நிலவுகிறது. ஒரு சில மக்கள், இந்தியா முழுவதும் பரவி வாழ்ந்த திராவிட மக்கள் மற்றும் சிந்து சமவெளி நாகரீகத்துக்கு சேர்ந்தவர்கள் மட்டும் ஒரு தனிப் பிரிவினராக இருந்தனர்.

தமிழ்நாட்டையும் உள்ளடக்கிப் பரந்திருந்த பண்டைய திராவிட நாடு தனித்தனி நாடுகளாக இருந்துள்ளது. இவற்றை காலத்துக்கு காலம் மாறி மாறி பல அரச வம்சங்கள் ஆண்டு வந்தார்கள்.முக்கியமாக, பாண்டியர், சேரர், சோழர், பல்லவர், சாளுக்கியர், விஜய நகரத்தார், நாயக்கர், போன்றோர் மிகவும் கடுமையாக ஆண்டு வந்தனர்.

கிபி 1 முதல் 4 ஆம் நூற்றாண்டு வரை முற்காலச் சோழர் தமிழகத்தில் ஆட்சி செலுத்தினர். இவர்களுள் மிகப் புகழ் பெற்றவனாக கரிகால் சோழன் விளங்கினான்.

கிபி 4 முதல் 9 ஆம் நூற்றாண்டு வரை சிறந்த கோவில்களை அமைத்த பல்லவர்கள் முன்னணிக்கு வந்தனர். இப் பல்லவர்கள் தென்னிந்தியாவில் 400 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தி உள்ளனர்.அதுமட்டுமன்றி காஞ்சிபுரத்தைத் தலை நகரமாகக் கொண்டு தமிழ் நாட்டின் பெரும்பகுதியைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தார். ஆறாம் நூற்றாண்டில் பல்லவர்கள் சோழரைத் தோற்கடித்தனர். இவர்களின் செல்வாக்கு இலங்கை வரை பரவியுள்ளது.இதில் முதலாம் மகேந்திரவர்மனும் அவனுடைய மகன் நரசிம்மவர்மன் பல்லவர்களுள் சிறந்து விளங்கிய அரசர்கள் ஆவார்கள்.திராவிடக் கட்டிடக்கலை பல்லவர் காலத்திலேயே உருவாக்கப் பெற்றது.

கிபி 9 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆ தித்த சோழனால் தோற்கடிக்க பட்டதுடன் பல்லவர் ஆட்சி தமிழ் நாட்டில் முடிவுக்கு வந்தது.

கிபி 9 முதல் 13 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தார்கள். இராஜராஜ சோழ மற்றும் அவரது மகன் ராஜேந்திர சோழன் அவர்களது காலத்தில் சோழர், தென்னிந்தியாவில் ஒரு பலம் ஒரு மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்தார். அதன்பிறகு 13 ஆம் நூற்றாண்டில் சோழர்களின் ஆதிக்கம் குறைந்தது.

14ஆம் நூற்றாண்டில் சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு பாண்டியர்கள் ஆட்சியின் மீண்டும் எழுந்தது. ஆயினும் அந்த எழுச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை.1316 இல் படையெடுத்து வந்த கில்ஜி ஆட்சியாளர்கள் மதுரையை சூட்டினார்கள்

17ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டு சிற்றரசர்கள் இடையே நிலவிய சச்சரவுகளை பயன்படுத்தி அவர்களைப் பிரித்தாண்டு, அவர்களின் மேல் தங்கள் அதிகாரத்தை செலுத்தி வந்தனர்.தமிழ்நாடும் அதைத் தொடர்ந்து தென்னிந்தியாவும் மெல்ல மெல்ல ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. ஆங்கிலேயர் அதிகாரத்தை பயன்படுத்தி இந்த காலக்கட்டத்தில் அவர்களை எதிர்த்துப் போராடிய தமிழ் ஆட்சியாளர்களும் கணிசமானோர் இருந்தனர்.

இருபதாம் ஆண்டு நூற்றாண்டில் இந்தியா விடுதலை அடைந்தபோது, மதராஸ் மாகாணம் மதராஸ் மாநிலம் ஆனது. 1953இல் மதராஸ் மாநிலத்தின் தெலுங்கு பேசும் மக்கள் உள்ள வட பகுதிகள் ஆந்திர மாநிலமாகவும், தமிழ் பேசும் தென் பகுதிகள் மதராஸ் மாநிலமாகவும் பிரிக்கப்பட்டது.1956இல் மாநில எல்லைகளை மறு வரையறை செய்யும் சட்ட திருத்தத்தின் மூலம் மதராஸ் மாநிலத்தின் மேற்கு கடற்கரை பகுதிகள் கேரளாவிற்கும் கர்நாடகாவிற்கும் இடையே தனித் தனியாக பிரிக்கப்பட்டது. 1968 இல் மதராஸ் மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது.

 பேச்சின் மொழியாக பயன்பட்ட ஒரு மொழி கால வளர்ச்சியில் எழுத்துக்கள் என பெரும் வரி வடிவம் பெற்ற பிறகு அம்மொழியில் இலக்கியங்களும் இலக்கணங்கள் ஆகவும் தோன்றின.

உலகில் உள்ள பல வளம் பெற்ற மொழிகளை போன்று தமிழுக்கு ஒரு நெடிய வரலாறு இருக்கிறது. ஒரு நீண்ட பாரம்பரியத்தில் தமிழ் மக்கள் எவ்வாறெல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை தமிழ் இலக்கிய வரலாற்றின் மூலம் அறியலாம்.

இயற்கையோடு இணைந்து மிகுந்த செம்மாந்த வாழ்க்கையை வாழ்ந்து இருந்திருக்கிறார்கள். நெறி பிறழ்ந்து வாழத் தலைப்பட்ட போதே நீதிகளை புகட்டி இருந்திருக்கிறார்கள். காப்பியங்களை படித்து பல வரலாறுகளை மனதில் பதிய வைத்துள்ளார்கள். பொய்யும் வழுவும் புகுந்து மக்கள் நிலை தடுமாறிய போது ஆழ்வார்களும் நாயன்மார்களும் பக்தியைப் பரப்பி இருந்திருக்கிறார்கள்.தெய்வங்களுக்கும் தனி மனிதர் துடிக்கும் இன்ன பிறவற்றில் இருக்கும் பல்வேறு சிற்றிலக்கியங்களை எழுதி இருக்கிறார்கள். மேலை நாட்டினரின் ஆக்கிரமிப்பின் போது அங்கு தோன்றி வளர்ந்த புதினம் சிறுகதை, புதுக்கவிதை, நாடகம், போன்ற இலக்கியங்களை இங்கு வளர்த்தார்கள். எனவே இலக்கியம் என்பது மக்களின் வாழ்வோடும் மிகவும் நெருங்கிய தொடர்புடையது.மக்களின் வாழ்க்கைமுறை மாறும்போது இலக்கியத்தின் அமைப்பும் மாறுவதை தமிழிலக்கிய வரலாற்றை அணுகும் போது அறிந்து கொள்ளலாம்.

இந்த உலகில் பல்லாயிரக்கணக்கான மொழிகள் இருக்கின்றன.அதில் ஒரு மூல மொழி என்பதில் இருந்து பிரிந்தவை ஒரு குடும்பம் மொழியில் அடக்க பெறுகின்றன. எல்லா மொழிகளையும் பல குடும்பங்களாக பகுத்து அடக்கிவிடலாம்.

உலகில் எந்த மொழியிலும் காப்பியங்கள் திடீரென்று தோன்றி விடுவதில்லை.வாய்மொழி இலக்கியமாக இருந்தவை எழுத்து வடிவம் பெற்ற பிறகு புலவர்களால் எழுதப் பெறுகின்றன. காப்பியங்கள், அரை இலக்கியங்களைப் போல சில நூற்றாண்டுகளுக்கு இடையில்.காப்பிய பொருள் அடிப்படையில் பார்க்கும் போது வேறு வேறு காலங்களில் தோன்றியவை ஒன்றாக இணைகின்றன. இவ்வகையிலேயே பல்வேறு காலங்களில் தோன்றிய காப்பியங்கள் இங்கே தொகுத்து விளக்கப் பெறுகின்றன.

தமிழர் இரு இயற்கையோடு இணைந்து வாழ்ந்த காலத்தில் தோன்றியவை சங்க இலக்கியங்கள் எனப் போற்றப்பெறும் பாட்டும் தொகையும் ஆகும்.அவை தோன்றிய பிறகு நீதி இலக்கியங்களும் அவற்றை ஒட்டிய காலகட்டத்தில் இரட்டை காப்பியங்கள் என பெரும் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற இலக்கியங்கள் தோன்றின.