நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயத்தை மேம்படுத்துதல்

        நமது இந்திய நாட்டில் நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகையால் நாம் உணவு உற்பத்தி செய்யும் கட்டாயத்தில் உள்ளோம். இந்தியாவில் விவசாயிகள் அதிகமாக வாழக்கூடிய கூடிய இடங்களில் அங்குள்ள மக்களுக்கான பிரச்சினைகள் அதிகமாக உள்ளது. ஆட்கள் பற்றாக்குறை, தண்ணீர் பற்றாக்குறை, வறட்சி, மழைக்காலங்களில் சரியாக மழை வராமல் இருத்தல், வன விலங்குகள் மற்றும் இயற்கை சீற்றங்களால் மக்களுக்கு வரும் பிரச்சினைகள் ஏராளமாக உள்ளன.

        தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, குறைவான எண்ணிக்கையில் ஆட்களைக் கொண்டு செய்யக்கூடிய விவசாய முறைதான் இன்றைய காலகட்டத்தில் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அப்படிப்பட்ட நவீன தொழில்நுட்ப முறையில் பலவகையான விவசாயம் முறைகள் உள்ளன. இன்றைய காலகட்டத்தில் மண்ணில்லா விவசாய முறை சாத்தியம் என இந்திய தொழில்நுட்பம் நிரூபித்துள்ளது.
         மண் இல்லாத விவசாயமா? என்ற கேள்வி உங்கள் அனைவர் மனதிலும் எழுந்திருக்கும். மண் இல்லாத விவசாய முறைதான் "ஹைட்ரொபோனிக்ஸ் விவசாயம்" (ரசாயன உணவு கொண்டு நீரில் வளரும் செடிகள்) ஆகும். அதைப்பற்றி இப்போது காணலாம்.

இந்தியாவின் வேளாண் தொழில் :
         இந்தியாவின் "முதுகெலும்பு விவசாயமும் விவசாயிகளும்" தான். அனைத்து தொழில்களுக்கும் முன்னோடியாக விளங்குவது வேளாண் தொழில் ஆகும். இந்திய மக்கள் தொகையில் 60 சதவிகிதம் பேர் விவசாயத்தையும் விவசாயம் சார்ந்த தொழில்களையும் நம்பியுள்ளனர். விவசாயத்தைப் பொறுத்தவரை பல்வேறு தொழில்நுட்பங்கள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன. விவசாயத்திற்கு மிகவும் அடிப்படையாக இருப்பது தண்ணீர் மற்றும் மண் ஆகும்.

       ஆனால் தற்போது உள்ள நவீன தொழில்நுட்பங்கள் மூலம் மண்ணில்லாமல், நிலம் இல்லாமல் செடிகளை வளர்க்கும் முறை தான் "ஹைட்ரொபோனிக்ஸ் விவசாயம்" ஆகும். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் தற்போது பலபேர் விவசாயம் தொடர்பான விழிப்புணர்வை அடைந்து வருகின்றனர்.

 "ஹைட்ரொபோனிக்ஸ் விவசாயம்" என்றால் என்ன?

      "ஹைட்ரொபோனிக்ஸ் விவசாயம்" என்பது புதிய அறிவியல் கண்டுபிடிப்பு பெயர் இல்லை. கிட்டத்தட்ட  நூற்றுக்கணக்கான வருடங்களுக்குப் பின்பு பண்டைய கால மக்கள் ஏரி மற்றும்  ஆறுகள் போன்ற நீர் நிரம்பிய இடங்களில் raft(குவியல்) அதாவது, படகு போன்று செய்து நெல் மூட்டை மற்றும் பயிறு வகை மூட்டைகளை படகின் மேல் வைத்து  மிதக்க விடுவார்கள். 

      அதன்பின் நெல் மூட்டைகள் நீரில் இருக்கும் உரத்தை(மருந்தாக) எடுத்துக்கொண்டு நெல் பயிராக வரும். அதுமட்டுமல்லாமல், "hanging gards babilon" என்னும் "Hanging Garden" கல்வெட்டுக்களில் நீரைப்  பாய்ச்சி அதன் மூலம் பயிர்களை வளர்த்தனர் என அறிவியல் ஆராய்ச்சி கூறுகிறது. கடந்த 15 மற்றும் 17 வருடங்களாக இந்த "ஹைட்ரொபோனிக்ஸ்" உபயோகப் படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
      "ஹைட்ரொபோனிக்ஸ்" என்ற இந்த புதிய செயல்முறை வெளிநாடுகளில் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மண் இல்லாத விவசாயம் இந்த முறையில் சாத்தியமாகிறது.

பயிர்கள் தயாரிக்கும் முறை

          பயிர்களை நீர்மூலம்  வளர்க்க முடியும். நீரில் ஆக்சிஜன், பொட்டன்ஷியல் ஹைட்ரஜன், மற்றும் பயிர் வளர்வதற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் நீரில் இருக்க வேண்டும்.  இவையே “ஹைட்ரோபோனிக்ஸ்” என  கூறப்படுகிறது.

          குறிப்பிட்ட இடத்தில்"poli house" அமைத்து அங்கு வரிசையாக பிளாஸ்டிக் பைப்புகளை அமைக்க வேண்டும். அதில் செடிகளுக்கு நீரோட்டம் பரவலாக செல்லுமாறு துளைகள் அமைக்க வேண்டும். அதன் பின்பு ஒரு சிறிய பிளாஸ்டிக் கப்பில் தேங்காய் துகள்களை நிரப்பி அதில் இரண்டு விதைகளை நிரப்பவேண்டும். விதை முதல்கட்டமாக இந்த இடத்தில்தான் 15 நாட்களில்  வேர் பிடிக்க தொடங்குகிறது.

          இந்த வேர் பிடிக்கும் காலகட்டத்தில் ஊட்டச்சத்து நிறைந்த தண்ணீர் மற்றும் ஒரே மாதிரியான தட்பவெப்ப வெப்பநிலை இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.  பிறகு செடிகள் வேர் விட்டதும் இரண்டாவது கட்டமாக Net parts(நிகர பாகங்கள்) - க்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு மீண்டும் செடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து நிறைந்த நீர் பிளாஸ்டிக் பைப்புகள் வழியாக செலுத்தப்படுகிறது.

         தேவையான ஈரப்பதத்தை தக்க வைக்க தேங்காய் நார் துகள்கள் இந்த செடிகளுக்கு பக்க பலமாக உள்ளது. அதன் பிறகு இறுதியாக செடிகள் மற்றும் கீழே கீரைகள் முழுமையான வளர்ச்சி அடைந்து விற்பனைக்காக தயார் நிலையில் வைக்கப்படுகிறது.

ஹைட்ரோபோனிக்ஸ்” விவசாய முறையின் சிறப்பம்சங்கள்:

         “ஹைட்ரோபோனிக்ஸ்” விவசாய முறையின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் இதில் 90% நீரை நம்மால் சேமிக்க முடியும்.  ஏனென்றால் மூடப்பட்ட பைபிளில் இருக்கும் துளைகள் வழியே தான் செடிகள் வளர்கின்றன. அதனால் தண்ணீர் எளிதில் ஆவியாகும் பிரச்சனையும் இல்லை. மேலும், இதற்கு உரம் தேவையில்லை. இதனால் எந்தவித பூச்சி தாக்குதலும் மற்றும் மண் சார்ந்த நோய்களும் ஏற்படுவதில்லை. மேலும் பூமியில் வளர்க்கப்படும் செடிகளை விட வேகமாக இந்தச் செடிகள் வளரும். அத்துடன் இந்த கீரைகள் 100 சதவிகிதம் சத்தானதாகவும் சுவையானதாகவும் இருக்கும்.

ஹைட்ரோபோனிக்ஸ்” மூலம் வளர்க்கப்படும் பயிர்கள் :

          இந்த மண்ணில்லா விவசாய முறை மூலம்  பூச்செடிகள், கீரைகள், காய்கறிகள், பழங்கள், மூலிகைச்செடிகள் உள்ளிட்டவற்றை வளர்க்கலாம். காய்கறிகளில் தக்காளி, வெண்டைக்காய், புடலங்காய், உள்ளிட்ட காய்கறிகளையும் மற்றும்  முதலில் செம்பருத்தி, ரோஜா, மல்லிகை உள்ளிட்ட பூக்களையும் வளர்க்க முடியும். மேலும் புதினா, கொத்தமல்லி போன்றவற்றையும் வளர்க்கலாம்.

    “ஹைட்ரோபோனிக்ஸ்” விவசாய முறை எளிதாகவும் மற்றும்  பயன் அளிப்பதாகும் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இம்முறையில் விவசாயம் செய்தவர்கள் கூறுகின்றனர். மேலும் இதனால் 90 சதவிகிதம் வரை நீரை சேமிக்க முடிகிறது என்றும், பயிர்களுக்கு உரம் தேவையில்லை என்றும் அதிகமாக பூச்சி தாக்குதலும் ஏற்படுவதில்லை என்றும் விவசாயிகள் கூறுகின்றனர். மிக எளிதாக இப் பயிர்களை செய்ய முடிகிறது என்று விவசாயிகள் மகிழ்ச்சியாக கூறுகின்றனர்.