இந்தியாவில் விவசாயத்தின் நிலை 

      இந்தியாவில் கிட்டத்தட்ட 70 கோடி பேருக்கு மேல் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்கின்றனர். இவர்களில் பாதி குடும்பங்கள் விவசாயத்தை நம்பியே வாழ்கின்றனர். மேலும் 17 கோடி பேர் கிராமங்களில் வசிக்கின்றனர். விவசாயத்தில் வரும் வருமானம் கிட்டத்தட்ட 8 கோடி குடும்பங்களுக்கு போதுமானதாக இல்லை. வருமானம் குறைவாக உள்ளதால் விவசாயிகள் அதிக வட்டிக்கு கடன் வாங்கி அதை கட்ட முடியாமல் தவிக்கின்றனர். இதனால் பல விவசாயிகள்  தற்கொலையும் செய்து கொள்கின்றனர். மேலும் விவசாயத்தின் நிலை குறித்த தகவல்களை இனி காணலாம்.

விவசாயிகளின் முக்கிய பிரச்சனைகள் :

     இந்தியாவில் விவசாயத்தின் உற்பத்திப் பொருட்களுக்கான, தகுந்த சேமிப்பு வசதிகள் இல்லை. நீர்ப்பாசன மற்றும் மின்சார வசதிகள் சரியாக இல்லை. விவசாயம் செய்வதற்கு தேவையான உரங்கள் சரியாக கொடுக்கப்படுவதில்லை. மேலும், விவசாயிகளுக்கு  போக்குவரத்து  செலவினால் கடன் மேலும் அதிகரிக்கிறது.

     விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க  விவசாயிகள் ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். வேளாண்மை துறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டம் நடத்தப்பட வேண்டும். மேலும் நாடெங்கும் உள்ள விவசாயிகளின் பிரச்சினைகளை கேட்டு பிரச்சினையை தீர்க்க வேண்டும்.  இவ்வாறு செய்வதனால் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

இந்திய விவசாயத்தின் எதிர்காலம்:

     இந்தியாவில் விவசாயம் சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேலான நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. உலக அளவில் விளைநிலங்கள் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த சமூக பொருளாதார வளர்ச்சியில் வேளாண் மற்றும் அதற்கு தொடர்புள்ள துறைகளான வேலைகள் மற்றும் காடு வளம் போன்ற ஒட்டுமொத்த உள்நாட்டு தயாரிப்பில்  தொடர்ந்து வீழ்ச்சி ஏற்பட்ட போதிலும், இன்று வரை அதிக பொருளாதாரத்தை ஈட்டும் துறையாக இந்தியா பெரும் பங்கினை வகிக்கின்றது.

    உலகிலேயே அதிகமான கால்நடை எண்ணிக்கைகளையும்( சுமார் 285 மில்லியன்) நமது இந்தியா கொண்டிருக்கிறது. நமது இந்தியா புகையிலை உற்பத்தியில் மூன்றாவது இடத்தைப்  பிடித்துள்ளது. முதல் இடத்தில் வாழை மற்றும் சப்போட்டா உற்பத்தியில் இந்தியா உள்ளது. சர்க்கரை, நிலக்கடலை, கோதுமை, அரிசி, உள்நாட்டு மீன் ஆகியவற்றில் உலகிலேயே அதிகம் உற்பத்தி செய்யும் இரண்டாவது நாடாக இந்தியா விளங்குகிறது. தேங்காய், இஞ்சி, பால், தேயிலை,  முந்திரிக்கொட்டை, கருமிளகு மற்றும் மஞ்சள்  ஆகியவற்றை உலகிலேயே அதிகமாக உற்பத்திசெய்யும் நாடாக இந்தியா இருக்கிறது. உலக அளவிலான பழங்கள் உற்பத்தியில் சுமார் 10 சதவீதத்தை இந்தியா கொண்டிருக்கிறது.

     1905 ஆம் ஆண்டில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கப்பட்டது. 1970 ஆம் ஆண்டு "இந்திய பசுமைப் புரட்சி"யை ஏற்படுத்திய ஆராய்ச்சிகளுக்குக் இந்தியா காரணமாக இருந்தது. வேளாண்மைத்  தகவல்களை ஆராய்கிறது, கால்நடை மற்றும் தாவர இனப்பெருக்கத்திற்கான புள்ளியியல் தொழில்நுட்பங்களில் நிபுணத்துவத்தை உருவாக்குகிறது, மேலும், வேளாண்மைச் சார்ந்த பரிசோதனைகளின் வடிவமைப்புகளுக்குப் புதிய தொழில்நுட்பங்களை இந்திய வேளாண் புள்ளியல் ஆராய்ச்சி நிறுவனம். உருவாக்குகிறது. விவசாய திட்டங்கள் முழுமையாக மதிப்பிடுவதற்காக இந்திய அரசாங்கம், சமீபத்தில் விவசாயிகளின்  ஆணையத்தை உருவாக்கியது.

     விவசாய தொழிலையே கண்ணும் கருத்துமாக கவனித்து வந்த பல  குடும்பங்களின் வாரிசுகள் தொழில்நுட்பமும், விஞ்ஞானமும் வளர்ந்து விட்டதால், விவசாயத்தை விட்டு வெளியே வந்து விட்டனர். மேலும், விளைநிலங்கள் குடியிருப்புகளாகவும் தொழிற்சாலைகளாகவும் உரு மாறிக் கொண்டிருக்கின்றன. முற்காலத்தில் ஆட்சியின் பெரும் வருவாய் நிலவரி இருந்ததால் விவசாயிகளுக்கு சமூகத்தில் மரியாதை இருந்தது. இன்றைய இந்தியாவில் ஆட்சியின் வருவாய் தொழில் வரி, வருமான வரி, விற்பனை வரி, சுங்க வரி என்று வேறு தொழில்களிலிருந்து பெறப்படுகிறது.

இந்திய விவசாயத்தின் வறுமை:
     
      இன்றைய காலகட்டத்தில் "உழுபவனுக்கே நிலம் சொந்தம்"  என்ற பாரம்பரிய சிந்தனை இன்றைய நிகழ்விற்கு ஒரு முக்கிய காரணமாகும். இந்தியா தன்னை மிகப்பெரிய வல்லரசு நாடாகவும், வளரும் நாடாகவும் இருக்கும் நிலையில் தற்போது 50% குழந்தைகளுக்கு உணவு கொடுக்க முடியாத சூழலில் உள்ளது. இன்று உலகமெங்கும் உணவின்றி பட்டினி கிடக்கும் பல கோடி பேரில் கால் பகுதியினர் அதாவது 70 லட்சம் பேர் இந்தியாவில் உள்ளனர் என அறிக்கை கூறுகிறது. இதுவரை இந்தியாவில் 1,82,940. ஆனால், இன்று வரை 2 லட்சத்து 20 ஆயிரம் என்று தற்கொலை எண்ணிக்கை கூடியுள்ளது. சென்ற ஆண்டில் விவசாய கடன் தொல்லையால் தற்கொலை செய்து  கொண்டனர். தற்கொலை செய்து கொண்டவர்களின் சராசரி வயது 25லிருந்து 45 வரை உள்ளவர்கள் ஆவர்கள்.

     விவசாயிகளுக்கு இன்று மானியம் இல்லை. விவசாய மானியம் என்ற பெயரில் பூச்சி மருந்து நிறுவனங்களுக்கும், டிராக்டர் நிறுவனங்களுக்கும், உரக் கம்பெனிக்கும் மானியம் வழங்கப்படுகிறது. ஆனால் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய மானியம் அவர்களுக்கு முறையாக வழங்கப்படுவதில்லை. இன்றைய நிலையில் வளர்ந்த நாடுகளாகிய ஜப்பானில் 5 விழுக்காடு மக்களும், அமெரிக்காவில் 2 விழுக்காடு மக்களும், வளம் குறைந்த நாடாகிய இஸ்ரேலில் 10 விழுக்காடு மக்களும், மக்கள் தொகை மிகுந்த நாடான சைனாவில் 60 விழுக்காடு மக்களும் வேளாண்மை செய்து வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன் இந்த நாடுகளில் வேளாண்மையில் பண கூடுதலான மக்கள் ஈடுபட்டிருந்தன. ஆனால், இந்தியாவில் பண்டைய காலங்களில் இருந்தே 70 விழுக்காடு மக்கள் வேளாண்மைத் தொழிலையே தாய்த் தொழிலாகச் செய்து வருகின்றனர்.
   
நமது தமிழ் மண்ணின் அடையாளமாக விளங்கும் காளைகள் விவசாயிகளுக்கு  பழங்காலத்திலிருந்து இன்றுவரை பயன்பட்டு வருகிறது. தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் கடைகள் இருந்தன. காளைகளுக்கு குறைந்த தீவனம், ஆனால் அதிக உழைப்பைத் தரும். விவசாயிகளின் தோழனாக இருந்து, அதிக பாரம் இழுத்துச் செல்லும் வண்டிகளில் காளைகள் பயன்படுத்தப்பட்டது.

     விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு சரியாக மானியம் வழங்காமல், விவசாயம் செய்வதற்கு  வர வேண்டிய சலுகைகளை மேலும் பல உதவிகளை செய்யாவிட்டால் நமது இந்திய நாடு  மீண்டும் பல விளைவுகளை சந்திக்க நேரிடும்.