இந்தியாவின் விண்வெளி வெற்றிச் சரித்திரம்

அணு ஆற்றல் ஆணையம்

1948-ல் அணு ஆற்றல் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி அமைக்கப்பட்ட அணு ஆற்றல் ஆணையத்தின் தலைவர் ஹோமி பாபா ஆவார். இதன் நோக்கம் இரண்டு.அவை அணு ஆற்றலை உற்பத்திக்குப் பயன்படுத்துதல்அணு ஆற்றலை வேளாண்மை, உயிரியல், தொழில் மற்றும் மருத்துவ முன்னேற்றத்திற்கு பயன்படுத்துவதாகும். அமைதிக்கும் அணு (Atom for peace) என்ற உறுதியான கொள்கை அடிப்படையில் இந்திய அணு ஆணையம் செயல்பட்டு வருகிறது.

இந்தியாவில் ஐந்து அணு ஆராய்ச்சி மையங்கள் உள்ளன.அவை மும்பையில் உள்ள பாபா அணு ஆற்றல் ஆராய்ச்சி மையம் (BARC)தமிழ்நாடு கல்பாக்கத்தில் உள்ள இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் (IGCAR)இந்தூரில் உள்ள அணு ஆராய்ச்சி நிலையம் (CAT)கொல்கத்தாவில் உள்ள அணு ஆராய்ச்சி நிலையம் (VECCC) \ஐதராபாத்திலுள்ள அணு ஆராய்ச்சி நிலையம் (AMD) இந்த ஆராய்ச்சி நிறுவனங்கள் துணைகொண்டு தமிழ்நாடு கூடங்குளத்தில் 200 MW திறன் கொண்ட அணு ஆற்றல் மின் உற்பத்தி திட்டம் (Atomic Power Project) ரஷ்யாவின் உதவியுடன் கட்டப்பட்டு வருகிறது. சென்னை அருகில் கல்பாக்கத்தில் அணு ஆற்றலைக் கொண்டு கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது.

நம் இந்திய நாடு அணு ஆற்றல் வளர்ச்சிக்கு முதன்மை அளிப்பது போல விண்வெளி ஆய்வுக்கும் முன்னுரிமை அளித்து வருகிறது. 1962-ல் இந்திய தேசிய விண்வெளிக் குழு உருவாக்கப்பட்டது. 1963-ல் நிக்கே அப்பாச்சே (Nicke Apache) என்ற விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. 1972-ல் விண்வெளி ஆணையம் (Space Commission) மற்றும் விண்வெளித்துறை (Department of Space) தொடங்கப்பட்டன. ஒருங்கிணைந்த, நெறிப்பாட்டு ஏவுகணை மேம்பாட்டுச் செயல்திட்ட அடிப்படையில், பிருத்வி, திரிசூல், ஆகாஷ், நாக் ஆகிய ஏவுகணைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (Indian Space Research Organisation - ISRO)
இதன் தலைமையகம் பெங்களூரில் உள்ளது. இதன் முக்கிய நோக்கம் விண்வெளி தொழில்நுட்பத்தைக் குறிப்பாக தொலைப்பேசித் தொடர்பு, தொலைக்காட்சி ஒளிபரப்பு, வானிலை, இயற்கை வளங்களைக் கண்டறிதல், இவற்றின் பயன்பாட்டை வளர்ப்பதற்குச் செயற்கைகோள்களை உருவாக்குதலும் (Satellite) அவற்றை விண்ணில் கொண்டு செல்வதற்கான விண்கலங்களைத் (Launch Vehicle) தயாரிப்பதும் ஆகும். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தேசிய தொலையுணர்வு அமைப்பு (National Remote sensing Agency) (Physical Research Laboratory) ஆகியவற்றை நடைமுறைப்படுத்துகிறது.

இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்பட்ட ஹோமி பாபா. விண்கலன்களை உருவாக்குவதில் நிபுணர். இவரது இடைவிடாத முயற்சியின் விளைவாகவே விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் உருவாகியது. இது கேரளா மாநிலம் திருவனந்தபுரம் தும்பாவில் உள்ளது. இங்கு ஏவுகணை செலுத்தும் தளம் (Rocket Launching Station)

ஶ்ரீ ஹரிகோட்டா

ஶ்ரீ ஹரிகோட்டா ஆந்திராவில் உள்ள விண்வெளித் துறைமுகம் (space Port) ஆகும். 170 கி.மீ பரப்பளவுள்ள இந்த ஆந்திரக் கடற்கரைத் தீவுதான் விண்கலன் செலுத்தும் களமாகும், இங்குள்ள ஷார் (Shar) மையத்திலிருந்து 1971-ல் முதல் ரோகிணி செயற்கைகோள் செலுத்தப்பட்டது. கடந்த ஆண்டுகளில் எஸ்.எல்.வி (SLV) ஏ.எஸ்.எல்.வி. (ASLV) பி.எஸ்.எல்.வி. (PSLV) போன்ற ஏவுகணைகள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.
இந்திய தேசிய செயற்கை கோள் அமைப்பு
1983ல் INSAT விண்ணில் செலுத்தப்பட்டது.1991 INSAT-1D விண்ணில் செலுத்தப்பட்டது.1993, 1999, 2000 ஆண்டுகளில் Insat - 2B, 2C, 2D, 2DD விண்ணுக்கு அனுப்பப்பட்டன.

தற்போது 450-க்கும் மேற்பட்ட இந்திய செயற்கைக் கோள்கள் பூமியைச் சுற்றி வருகின்றன. இவற்றின் மூலம் தொலைத் தொடர்பு, தொலைக்காட்சி ஒலிபரப்பு, வானிலை முன்னறிவிப்பு, பேரழிவு எச்சரிக்கை, தகவல் பரிமாற்றம், வானொலி ஒலிபரப்பு, கல்வி மற்றும் தொழில் பயிற்சி பற்றிய நிகழ்ச்சிகள் விண்ணிலிருந்து மண்ணிற்கு அனுப்பப்படுகின்றன.
செயற்கைக் கோள்கள் (Satellites) ஆரியப்பட்டா (1975).

இந்திய விஞ்ஞானிகளால் வடிவமைக்கப்பட்ட முதல் செயற்கைகோள் 1975 ஏப்ரல் 19-ஆம் தேதி சோவியத் நாட்டிலிருந்து விண்ணில் பூமிக்கு அருகாமையிலுள்ள சுற்று வழிக்கு அனுப்பப்பட்டது. இதன் இயக்கம் பூரீ ஹரி கோட்டா மைத்திலிருந்து இயக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியா விண்வெளி யுகத்தில் நுழைந்து சாதனை படைத்தது.

பாஸ்கரா -1

1979 ஜூன் 7-ஆம் தேதி இக்கோள் ரஷ்யாவிலிருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.தொலைக்காட்சி புகைப்படக்கருவி பொருத்தப்பட்ட இக்கோள் நீரியல் ஆய்வு (Hydrolic),கடலியல் (Oceanography) மற்றும் வானிலை பற்றிய தகவல்களை அனுப்பியது.1981 நவம்பர் 20ம் தேதி பாஸ்கரா - 11 விண்ணுக்குச் செலுத்தப்பட்டது.

ரோகிணி - 1980

1980 ஜூலை மாதம் 18ம் திே ரோகினி முதன்முதலாக இந்திய விண்வெளிசெயற்கைக்கோள் விஞ்ஞானிகளால் வடிவமைக்கப் பட்டு தயாரிக்கப்பட்டது. இது செயற்கைக்கோள் விண்கலம் - 3 (SLV -3) மூலம் விண்வெளிக்கு அனுப்பட்டது. 1983 ஏப்ரல் 17-ஆம் தேதி III ரோகினி விண்ணுக்கு அனுப்பப்பட்டது. ஆப்பிள் 1981 1981 ஜூலை மாதம் 18ம் தேதி ஆப்பிள் செயற்கைக்கோள் பிரெஞ்சு கயானாவிலிருந்து விண்வெளி மையத்தின் ஏரியாள் விண்கலம் மூலம் செலுத்தப்பட்டது. இது இந்தியாவின் முதல் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்.
ஐரோப்பிய அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், கனடாவை அடுத்த இத்தகைய செயற்கைக்கோள் விண்வெளிக்கு அனுப்பிய நாடு இந்தியா என்பது பெருமைக்குரிய செயலாகும். 1984-ல் இந்திய ராகேஷ் சர்மா விண்வெளிக்கு விஞ்ஞானி சென்று வந்தார்.