உலக அரங்கில் இந்தியா :

நவீன இந்தியாவின் முன்னேற்றப் பாதை

இந்தியா 1947ஆம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றது முதல் பல்வேறு தடைகளைத் தாண்டி இன்றைய முன்னேற்ற நிலையை அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில்தான் தனது 70வது சுதந்திர தினத்தைக் கொண்டாடியது. இன்று சீனாவுக்கும் ஜப்பானுக்கும் அடுத்த நிலையில் இந்தியா மூன்றாவது பெரும் பொருளியல் சக்தியாக இருக்கின்றது. சீனா ஏறக்குறைய 600 மில்லியன் மக்களின் வறுமையை ஒழித்துள்ளது என்றும் அமெரிக்காவுக்கே சவாலாக விளங்குகிறது என்றும் கூறும் விமர்ச்சகர்கள், இந்தியா அந்த அளவுக்கு சாதித்துள்ளதா என்றும் வினாவை எழுப்பி வருகின்றனர்.

இந்தியா சோவியத் ரஷ்யாவுடன் இணைந்து தன்னுடைய முதல் எஃகு ஆலையை , மத்திய பிரதேசத்தில் கட்டியது. அதைத் தவிர , சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நடுநிலையாக இருந்த திபேத்தை 1950களின் மத்தியில் சீனா ஆக்கிரமித்து தன் பிரதேசமாக ஆக்கிக்கொண்டது முதல் அரசியல் பிரச்சினைகள் எழுந்தன. ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவும் திபேத்தைவிட்டு அப்போதுதான் இந்தியாவுக்குப் புறப்பட்டார்.

அதற்குப்பின் 1962இல் இந்தியாவும் சீனாவும் போரில் ஈடுபட்டன. காரணம் விளக்கப்படாத அந்தப் போரில் கைப்பற்றப்பட்ட இந்தியப் பகுதிகள் இன்னமும் சீனாவிடமே உள்ளன. ஆனால், அந்தப் போருக்குப் பின்னர்தான் சோவியத் ரஷ்யாவுடன் இணைந்து, புதுடெல்லி அதன் ராணுவத்தை நவீன மயமாக்கியது. 1971ஆம் ஆண்டு பங்களாதேஷ் விடுதலைக்கு இந்தியா உறுதுணையாக இருந்தது. பங்களாதேஷ் விடுதலைப் போருக்குப் பின் இந்தியா அதன் முதல் அணுகுண்டையும் வெடித்துச் சோதித்தது.

இந்தியாவில் 1960 ஆம் ஆண்டுகளில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டபோது, தென்மாநில உணவு வகைகளில் கோதுமையும் வட மாநிலங்களில் அரிசிப் பயன்பாடும் பிரபலமாயின. இதற்குப்பின் 1991ஆம் ஆண்டு திரு பி.வி. நரசிம்மராவ் தென்பகுதியிலிருந்து தேர்ந்தெடுக் கப்பட்ட முதல் பிரதமர் ஆனபின் நாட்டின் பல கட்டங்களிலும் துறைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. இன்றைய நிலையில், தென் மாநிலங்கள் 2.4 டிரில்லியன் அமெரிக்க டாலர் வருமானத்தை ஈட்டித்தருகின்றன. ஆண்டுதோறும் விமானச் சேவையும் 20 விழுக்காடு வளர்ச்சியை  கண்டுவருகின்றது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு வருமானம் விரைவில் பிரிட்டனையும் மிஞ்சிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 1975 முதல் 90 வரை இந்தியா பல வாய்ப்புகளைத் தவறவிட்ட காலக்கட்டம் என்று கூறப்படுகிறது. 1975ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அவசரகாலச் சட்டம்தான் இந்திய ஜனநாயகத்தையே ஆட்டிவைத்தது என்பார்கள். இன்று இந்தியா தொலைத் தொடர்பு சாதன மேம்பாட்டிலும் வளர்ச்சி கண்டுவருகின்றது.

ஒரு காலத்தில் முழுமையான விவசாய நாடாக இருந்த இந்தியா இன்று சேவைத் துறையிலும் நாட்டம் கொண்டுள்ளது. மருந்துத் தயாரிப்புத் துறையிலும் இந்தியாவானது  வளர்ச்சி கண்டு வருகிறது. அண்மைய பொருள் சேவை வரிச் சட்டம் நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தி இரண்டு விழுக்காட்டுப் புள்ளி மேம்பாட்டை எட்டிக் கொண்டிருக்கின்றது. இன்றைய பிரதமர் மோடியின் தலைமையில் நேரடி வெளிநாட்டு முதலீட்டையும் அது ஆதரித்து ஈர்த்து வருகின்றது. மத்திய ஆட்சி நிலையில் ஊழல் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. கட்டுப்படியாகக் கூடிய வகையிலான விண்வெளித் திட்டங்களும் இந்தியாவை உயர்த்தி வருகின்றன.

அரசியல் வெற்றிக்கு செயல்திறனே முக்கியம் என்பதை இன்றைய இந்திய அரசியல்வாதிகள் உணர்ந்து வருகின்றனர். வரவிருக்கும் இந்தியாவின் குடியரசு தினத்தன்று ஆசியானின் பத்து நாட்டு தலைவர்களும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். 1947ஆம் ஆண்டு முதல் அயராது பாடுபட்டு, பலவித இன்னல்களை எதிர்கொண்டு வளமான எதிர்காலத்தை நோக்கி நடைபோட்டுக்கொண்டிருக்கும் இந்தியா மேலும் பல துறைகளில் சாதனைகளைச் செய்துகாட்ட வேண்டுமென்பதே அனைவருடைய விருப்பமாகவும் இலக்காகவும்  இருக்கும்.
அறிவியல் துறை வளர்ச்சி 
அறிவியல் தொழில்நுட்பம் ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு "நவீன கோவில்கள்" என்று  அழைக்கப்படும் "ஆராய்ச்சிக் கூடங்கள், தொழில் நுட்ப நிலையங்கள், பல்கலைக்கழகங்கள், மிகவும் அவசியமானது " என்று  நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு கூறினார். எனவே நம் நாட்டின் அணுவியல் துறையில் முன்னேற்றத்தைக் காண 1958-ல் அறிவியல் கொள்கைத் தீர்மானம் இயற்றப்பட்ட நிலையில் இந்தத் தீர்மானத்தின் மூலம் "நல்ல கல்விக் கொள்கைகளைக் கொண்ட அறிவியல் வளர்ச்சியை துரிதப்படுத்தி, தொலைநோக்குப்பார்வையுடன் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைய வேண்டும்" என்ற கொள்கை கொண்டுவரப்பட்டது.

தொழில் நுட்ப கொள்கை மற்றும் மேலாண்மை (Science and Technology Policy and Management)

இந்தியா விடுதலை அடைந்தபோது அதற்கு முன்பே உருவாக்கப்ட்ட அறிவியல் அடித்தளத்தின் மீது அறிவியல் - தொழில்நுட்ப தகவல் தொடர்பு தொழில்நுட்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1971 -ல் அறிவியல் தொழில்நுட்பத்துறை உருவாக்கப்பட்டது.அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் பல்வேறு திட்டங்கள் கீழ்கண்ட துறைகள் மூலம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிநுண்ணுயிரியல் தொழில்நுட்பம்பெருங்கடல் வளர்ச்சித்துறை விண்வெளி ஆராய்ச்சித்துறை அணுமின்னியியல். மின்னணுவியல்சுற்றுப்புறம் மற்றும் வனவியல் துறை.இவைத் தவிர, பல்வேறு அமைச்சகங்களைச் சார்ந்த துறைகளும் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம், இந்திய வேளாண்மை வளர்ச்சிக் கழகம், நீர்ப்பாசனம் மற்றும் மின் சக்தி போன்ற துறைகளும் அடங்கும். இக்கொள்கை உலகத் தொழில்நுட்பப் போட்டியை எதிர்கொள்ளவதற்காக உருவாக்கப்பட்டன.

ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி திட்டங்கள்
முன்னுரிமை ஆராய்ச்சி வளர்ச்சி அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல் போன்ற முன்னுரிமை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பகுதிகளைக் கண்டறிந்து வளர்ந்து வருகின்றது. இத்திட்டம் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி மன்றத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. 2. உள் கட்டுமான வசதிகள் அறிவியல், தொழில்நுட்ப திட்டங்களைத் திறமையாக வளர்க்க உள்கட்டுமான வசதிகள் (Infrastructure) மிகவும் அவசியமாகிறது, தலைச்சிறந்த விஞ்ஞானிகளை மையப்படுத்தி, வசதிகள் செய்து கொடுத்தல், ஆராய்ச்சி - வளர்ச்சி ஆய்வுக் கூடங்களுக்கும், பல்கலைக் கழகங்களுக்கும், ஆராய்ச்சி வளர்ச்சித் திட்டத்தை செயல்படுத்ததுதல், தொழிற்சாலையில் உள் கட்டுமான வசதிகளையும், அதி நவீன உபகரணங்களையும் அதிகமாக்குதல் போன்றவை இதில் அடங்கும்.

திறமைத் தேடல் திட்டம் இளம் மாணவ விஞ்ஞானிகளிடையே மறைந்து கிடக்கும் அபரித ஆற்றல்களை வெளிக்கொணர அவர்களது கல்வி வளர்ச்சிக்கும், பயிற்சிக்கும் பல உதவித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.