படிமம்:Market porter pedals jugaad goods carrier tricycle in ...

உழைப்பின் முக்கியத்துவமும் பொருளீட்டுவதன் அவசியமும் -

பொருளீட்டுவதற்கான  முயற்சி : -

பொருளீட்டுவதற்கான  முயற்சி என்பது  தனி மனிதப் பொருளாதாரத்தில் (நுண்ணியல் பொருளாதாரம்) மனிதன் தனது வாழ்க்கைக்குப் பொருளையோ அல்லது பணத்தையோ ஈட்டுதல் அவசியமாக வற்புறுத்தப்படுகிறது  . பல கட்டூரைகளிலும் நாளிதழ்களிலும் தனி மனிதன் பொருளீட்டுவதற்குரிய கருத்துக்களும் இடம் பெற்றுள்ளன  . " பொருளாதார முயற்சியில் ஒழுக்கங்களுக்கு உட்பட்டு பொருளை ஈட்டுவதற்குத் , தனி மனிதனுக்கு உரிமை உண்டு , தொழில், உழைப்பு  , வணிகம் போன்ற முயற்சிகளில் மனிதன் பொருளீட்ட வேண்டுமென்று கலைக்களஞ்சியங்கள் மதிப்பீடு செய்கின்றது  .  மனிதர்களுக்குப் பொருள் வேண்டும் அப்பொருளை அவர்கள் முறையாக ஈட்டுதல் வேண்டும் அவர்கள் ஈட்டும் பொருள் சமுதாயத்தில் ஒரு மதிப்பை ஏற்படுத்துவதாக அமைய வேண்டும் .

தனி மனிதனின் உழைப்பை வலியுறுத்தும் திறன்: -

 உழைப்பு என்பது தனி மனிதனையும் சமுதாயத்தையும் உயர்த்துவதாகும்  . தனி மனிதனின் வருவாயைப் பெருக்கும் . அவை தனி மனிதப் பொருளாதார வளர்ச்சிக்குரிய கருத்தாக அமைந்துள்ளன  . அரசியல் தலைவர்கள் கடின உழைப்பை நாட்டின் வளர்ச்சிக்குரிய பாதையாக எடுத்துக்காட்டி வந்துள்ளனர்  . “ மனிதன் முன்னேறுவதற்கு மூன்று வழிகள் உள்ளன என்றும் அவற்றுள் முதல் வழி உழைப்பு இரண்டாவது வழி உழைப்பு , மூன்றாவது வழி உழைப்பு என மூன்று வரிகளுமே உழைப்பு தான் என்பதை பொதுவுடமை இயக்கத் தலைவர் லெனின் கூறுவர்  .

இந்தக் கூற்று உழைப்புக் கொள்கையை தனி மனித , சமுதாய , பொருளாதார நிலையை உயர்த்தும் என்பதை வலியுறுத்துவதாகும்  . உழைப்பதின் அவசியத்தையும் , உழைப்பதின் வலிமையையும் , உழைப்பதின் பயனையும் காலந்தோறும் படைப்பாளர்களும் சிந்தனையாளர்களும் வலியுறுத்தி வந்து உழைப்பவர்கள் வெற்றி கொள்பவர்கள் உழைப்பில் மிகுந்த நாடு உயர்ந்து நிற்கும் என்பதற்கு , ஜப்பான் மக்களும் , நாடும் எடுத்துக்காட்டாய் உள்ளனர் என்பர்  .

    "உழைப்பின் முயற்சிக் கேற்ப மக்கள் வாழ்வில் வளர்ச்சி வரும் " -
 என்று உழைப்பின் சிறப்பை வாழ்வுக்கு நெறி வகுத்த திருவள்ளுவர் உணர்த்துவார்  . இக்காலத் பல தமிழ்ப் படைப்பாளிகள் உழைப்பின் பெருமையை உணர்த்தும் கருத்துகளில் தனி மனிதனை உயர்த்தும் பொருளியல் கருத்தினை வெளியிட்டுள்ளார்  . ' உழைப்பின் வியர்வையிலிருந்து தான் வெற்றியின் வேர் விடுகிறது ' என்பதை ' பூக்கள் நாளையும் மலரும் ' என்னும் நாவலில் வரும் சபேசன் , கூறும் கூற்றுகளே இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்  . " எனக்கு பணத்தேவையிருக்கு ஆனா அது என் உழைப்பாலும் சிக்கனத்தாலும் வரனும்னு நினைக்கிறேன் ஆனா , பணம் உழைப்பாலேயே வாறது இல்லைன்னு மக்கள் நினைக்க ஆரம்பிச்சுட்டாங்களா ? முறையில்லாத வழியில் வருவது தான் பணம்னு ஆயிடுச்சு  . சமூகத்தில் பெரியவங்கனு சொல்லப்படற எல்லோர்கிட்டேயும் கள்ளப் பணம் இருக்கு கள்ளப் பணம் குற்றம் என்று சட்டம் சொல்கிறது .

உழைப்பின் மூலம் கிடைக்கும் செல்வம்:

உழைப்பின் மூலம் கிடைக்கும் செல்வமே ஒருவருக்கு இன்பம் தரும்  உழைப்பினால் சேர்த்த செல்வமே ஒருவர் பெற்ற தனி மனிதனின் வருவாயாகக் கணக்கிடப்பட்டு தேசிய வருவாயாகக் கருதப்படும் உழைப்பின்றிக் குறுக்கு வழியில் ஒருவர் சேர்த்த செல்வம் உண்மை இன்பம் பயவாததோடு அது தேசிய வருவாயைக் கணக்கிடவும் பயன்படாது கள்ளப் பணமாய் , கருப்புப் பணமாய் நாட்டுக்கும் பயன்படாததாகிவிடும் .   வர்க்கத்தினரெல்லாம் உழைப்பையே சாமியாகப் போற்றுகின்றனர் என்று குறிப்பிட்டு இருப்பதையும் உழைப்பை சாமியாகப் போற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியிருப்பதையும் உணரலாம்  . இதனைப்  தமது உழைப்புக் கொள்கையாகவும் , தனி மனித பொருளாதாரக் கருத்தாகவும்  கருத இடமுண்டு , - “ மனிதன் , உண்ண மட்டும் பிறக்கவில்லை , உழைக்கவும் பிறந்திருக்கிறான் “ என்பது பொருளியல் வாதிகளின் கருத்து  .  மனிதன் வயிற்றோடு மட்டும் பிறக்காமல் கை கால்களோடு பிறந்திருக்கிறான் என்பதே இதற்குச் சான்று என்பர்  .  "மனித உழைப்பும் உழைப்பதற்கான வேலையும் அவசியம்"

பொருளைத் தேடவும் , பொருளை சேமிக்கவும் அதை வளர்க்கவும் தனி மனிதனின் உழைப்பு ஒன்றையே முதன்மை படுத்துகிறார்  . இதில் , தனி மனிதன் உழைக்க வேண்டுமென்பதும் உழைப்பதற்குரிய வேலை தேவையென்பதும்  தனி மனிதப் பொருளாதாரக் கருத்தாக உணர்த்தப்பட்டுள்ளது தெளிவாகிறது  .

சந்தைப் பொருளாதாரம் :

சந்தைப் பொருளாதாரம் என்பது பொருளாதாரத் துறையில் ஓர் அலகாகப் பிரித்தறியப்படும் பகுதியாகும் உற்பத்திப் பொருட்கள் வணிகப்படுத்தப்படுவதை விளக்குவதாகும்  . நுகர்வோரை ஈர்க்க விற்பனையாளர்கள் பல்வேறு முறைகளை மேற்கொள்கின்றனர் தங்கள் பொருள்களின் விற்பனையைப் பெருக்குவதற்கு நுகர்வோரின் நுகர்வுக்கு வசதியாக பொருட்களை அளிப்பார்கள்  . நுகர்வோர்க்கு வேண்டிய பல்வேறு பண்டங்களையும் ஒரே இடத்தில் குவித்து நுகர்வோர் எளிதாகப் பெறுவதற்கு கடைகளை அமைப்பார்கள் பொருட்களின் தரங்களையும் தன்மைகளையும் சுட்டிப் பண்டங்களை விளம்பரப்படுத்தி விற்பார்கள்  . கடைக்காரர்கள் மேற்கொள்ளப்படும் இத்தகைய  உத்தி முறைகளைக் குறித்து எழுத்தர்கள் எழுப்பியுள்ள கருத்து , இன்றைய இந்திய சந்தைப் பொருளாதாரத்தில் செய்யப்படும் சீர்திருத்தக் கருத்தாக வெளிப்பட்டுள்ளது  .