economics-part-2

பொருளாதாரம் - பகுதி இரண்டு 

அறிந்தும் அறியாததும் மனித நலனும் சேமிப்பும்

மனிதனின் விருப்பங்களை பூர்த்தி செய்ய உதவிடும் செல்வத்தைப்(பொருளாதாரத்தை) பெருக்குதல் மற்றும் அச்செல்வத்தின் பயனை மனிதர்களின் நலத்திற்கு ஏற்ப கொண்டு வருதலைப் பற்றிய சமூக அறிவியல் என்பார் -ஆல்பர்ட் மார்ஸல் .

பொருளியல்:

“விருப்பங்களோடு கிடைப்படுமையுள்ள மாற்று வழிகளில் பயன்படத்தக்க சாதனங்களோடும் நெருங்கிய தொடர்புள்ள மனித நடவடிக்கைகளைப் பற்றி பயில்கின்ற அறிவியலே பொருளியல் ஆகும் என்று ராபின்ஸ் கூறுகிறார் . "

பொருளாதாரம்:

"மனிதனும் சமுதாயமும் எப்படிப் பொருள்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். பணத்தைப் பயன்படுத்தியோ ( அ ) பயன்படுத்தாமலோ மாற்றுப் பயன்பாடுகளுள்ள பற்றாக்குறையான உற்பத்திச் சாதனங்களை எவ்வாறு பயன்படுத்திக் காலப்போக்கில் பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்கின்றனர் . இதனை நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் மக்களிடையே நுகர்வுக்காக எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படுகிறது . என்பதைப் பற்றி ஆராய்வதே பொருளாதாரமாகும் என்று சாமுவேல்சன் " குறிப்பிடுகின்றார் .

பேரியல் பொருளாதாரம்:

“ அரசின் தலையீடு மற்றும் கட்டுப்பாடுகள் மூலம் நாட்டின் வருவாய் , உற்பத்தி மற்றும் வேலை வாய்ப்பு போன்ற காரணிகள் ஒட்டுமொத்த வளர்ச்சி குறித்த பொருளியல் கருத்துக்களைப் பேரியல் பொருளாதாரம் என்கிறார் கீன்ஸ் .

பொருளாதாரத்தின் வளர்ச்சி மாற்ற நிலை:

 ' பொருளாதாரம் பற்றிய அறிஞர்களின் விளக்கங்கள் பொருளியல் என்பதற்கு அறிஞர்கள் அளித்துள்ள இலக்கணங்கள் , ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒரு மாற்றம் பெற்று வந்துள்ளதை அறிய முடிகிறது . பொருளியலுக்கான இலக்கணம் , பொருளியலுக்கான வளர்ச்சி இலக்கணம் , பொருள்சார் நல இலக்கணம் , கிடைப்பருமை இலக்கணம் எனப் படிநிலையாக மாறி வந்துள்ளதை உணர முடிகிறது . தனிமனிதன் மற்றும் நாடு தொடர்பான பொருள் சார் நடவடிக்கைகள் குறித்த விளக்கங்களாக அவை விரிந்துள்ளன என்பதையும் அறிய முடிகிறது . பொருளியலுக்கு முதலில் இலக்கணம் வகுத்த பொருளியலின் தந்தை ஆடம் ஸ்மித் செல்வத்தை ஈட்டுதல்.ஈட்டியதைச் சேமித்தல் என்பன தான் மனிதனின் பொருளாதார நடவடிக்கை எனக் கருதி விளக்கமளித்துள்ளார் . இவரது கருத்தை ஒட்டியே மில் , கென்ரஸ் ஆகிய பொருளியல் அறிஞர்கள் செல்வத்தைப் பெருக்குவதற்கான வழிமுறைகளைக் கண்டறிவதே பொருளாதாரம் எனத் தெரிவித்துள்ளனர் . ஆனால் , புதிய தொன்மைப் பொருளியல் அறிஞர் மார்ஸல் , செல்வத்தை , மனித நலம் காணும் வகையில் செலவிடுதலே பொருளாதாரமாகும் என்ற மறு சிந்தனையை வழங்கியுள்ளார் . ராபின்ஸ் மனிதனுடைய எண்ணற்ற விருப்பங்களும் பற்றாக்குறையுள்ள சாதனங்களும் ஒன்றையொன்று சார்ந்து பொருளியல் சிக்கல் ஆவதைக் கருத்தில் கொண்டு அறிவியல் அடிப்படையில் பொருளியலின் எல்லையை விரிவடையச் செய்துள்ளார் .

பொருளாதார வகைபாடுகள்:

பொருளாதார வகைப்பாடு பொருளாதாரம் தனிமனிதப் பொருளாதாரம் , நாட்டுப் பொருளாதாரம் என இரண்டு வகையில் பிரித்து அறியப்படுகிறது . தனிமனிதப் பொருளாதாரத்தை நுண்ணியல் பொருளாதாரம் என்றும் , நாட்டுப் பொருளாதாரத்தைப் பேரியல் பொருளாதாரம் என்றும் வழங்குகின்றனர் . தனிமனிதப் பொருளாதாரத்தை விட அளவில் பெரியதும் ஒட்டுமொத்தம் ஆனதுமான நாட்டுப் பொருளாதாரத்தை விட அளவில் பெரியதும் ஆனதால் பேரியல் பொருளாதாரம் என்கின்றனர்.அளவிற் சிறியதாயின் தனிமனிதப் பொருளாதாரத்தை நுண்ணியல் பொருளாதாரம் என்கின்றனர் .

தனிமனிதப் பொருளாதாரம் ( அ ) நுண்ணியல் பொருளாதாரம்:

 தனிமனிதப் பொருளாதாரம் ஒவ்வொரு மனி தம் வாழ்க்கைை நடத்த எடுத்துக் கொள்கின்ற கடின உழைப்பு , உழைப்பின் மூலம் கிடைக்கும் வருவாய்க்கு ஏற்ப ஆதாயமான செலவுகளை மட்டுமே தேர்வு செய்யும் விதம் ' , வருவாயை உயர்த்திக் கொள்ள ஏற்படுத்திக் கொள்ளும் சிக்கன் சேமிப்பு முயற்சிகள் " , வருவாய்க்கு மேல் செலவிடும் போது கடன் பெற்றுச் செலவை சரிகட்டும் செயல் " ஆகிய பொருள் சார்ந்த நடவடிக்கைகள் அனைத்தையும் அறிதலும் ஆராய்தலுமே தனிமனிதப் பொருளாதாரம் ( அ ) நுண்ணியல் பொருளாதாரம் எனப்படுகிறது .

நாட்டுப் பொருளாதாரம் ( அ ) பேரியல் பொருளாதாரம்:

நாட்டுப் பொருளாதாரம்  ஒரு நாட்டினுடைய பொருளாதாரம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளவும் , பொருளாதாரக்கொள்கையை வகுக்கவும் " . பொது வேலைவாய்ப்பின்மை , தேசிய வருவாய் , பொருளாதார வளர்ச்சி , வணிகச் சூழல் போன்ற பொருளாதார பிரச்சினைகளுக்கான தீர்வை நல்குவதும் நாட்டுப் பொருளாதாரமாகும் . சிறப்பாக நாட்டின் வருவாய் , உற்பத்தி , முதலீடு , நுகர்வு , செலவு , சேமிப்பு , தேவை , பொது விலைமட்டம் ஆகிய ஒட்டு மொத்தமான பொருள்சார் நடவடிக்கைகள் அனைத்தையும் உள்ளடக்கி ஆராய்வது ' நாட்டுப் பொருளாதாரம் ( அ ) பேரியல் பொருளாதாரம் எனப்படுகிறது .

பொருளியல்  அறிஞர்கள் பொருளாதார பொதுவரையறை பொதுவாக தனிமனிதர்கள் தங்களுடைய பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வெவ்வகையில் முயற்சிகள்  மேற்கொள்கின்றனர்  என்பதைக்  குறித்து  அறிதலை தனிமனிதப் பொருளாதாரம் எனவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வெவ்வகையில் அரசுகள் முயற்சிகள் மேற்கொள்கின்றனர்  என்பன குறித்து அறிதலை நாட்டுப் பொருளாதாரம் எனவும் பொருளியல் அறிஞர்கள் பொருளியலை வகைப்படுத்துகின்றனர் . “ பொருளாதார  நிலை மாறும் பொழுது மாறும் நிலைமைக்கேற்ற  புதிய  வாழ்க்கை  நெறிகள்  எழத் தொடங்கும் . புதிய நெறிகள் தோன்றும் பொழுது பழையனவற்றுக்கும் புதியனவற்றுக்கும் உள்ள இயைபின்மை பளிச்செனத் தெரியும் இதுவே மரபு போரட்டம் " " என்ற க.கைலாசபதியின் கருத்திற்கேற்ப பொருளாதாரம் என்பது தனிமனிதப் பொருளாதாரம் , நாட்டுப் பொருளாதாரம் , என இரண்டு வகைகளில் அறியப்பெறுவது . தனிமனிதன் மற்றும் அதனை ஆளும் அரசுகள் ஆகிய இரண்டு பக்கத்திலும் நின்று உழைப்பு , வருவாய் , நுகாவு , உற்பத்தி , பகிர்வு , பரிவர்த்தனை , கடன் என்பன போன்ற பொருள் சார்ந்த அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் அவற்றின் விதிமுறைகள் குறித்தும் ஆராய்வது . தனிமனிதன் செல்வத்தைப் பெருக்குவதற்கான வழி முறைகளைக் கண்டறிவது மற்றும் வருவாயைப் பெருக்க கடின உழைப்பை மேற்கொள்வது.