தமிழ்நாடு அடிப்படை தகவல்கள்

தமிழ்நாட்டு அரசின் நலத்திட்டங்கள் 2020

தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியுதவித் திட்டம் மற்றும் பருத்தித் தொழில்நுட்பக்குழு - மிக இன்றியமையாததான வரிவிலக்கு தரப்பட்டுள்ளது. வரி அமைப்பானது வளர்ச்சியையும் நாட்டினுள் உச்சபட்ச விலையையும் மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப மேம்பாட்டு உதவித்திட்டம் மற்றும் பருத்தி தொழில்நுட்பக் குழு, தொழிற்சாலைகளை நவீனப்படுத்துதலையும், மேம்படுத்துதலையும், மூலப்பொருள்களை மலிவுவிலையில் வாங்குவதையுமே, நோக்கமாகக் கொண்டுள்ளது; முதலீடும் இக்காரணங்களுக்காகவே செய்யப்படுகிறது. முதலீடு மானியத்தில் 10% அதிகரிக்கப்பட்டதால், தொழில்நுட்ப மேம்பாட்டு உதவித் திட்டத்தில் (Technology Upgradation Fund Scheme) செய்யப்பட்ட முதலீடு ரூ.1300 கோடியிலிருந்து (2003-04) ஏறத்தாழ ரூ.20,000 கோடிக்கு (2006-09) அதிகரித்துள்ளது ஒருங்கிணைக்கப்பட்ட நெசவுப்பூங்கா (Integrated Textiles Parks) எனும் திட்டம். நெசவுத் தொழில் கட்டமைப்பினை பலப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 40 ஒன்றிணைந்த நெசவுப் பூங்காக்கள் ஏற்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நெசவுத்தொழில் மேம்பாட்டிற்காக தொழில்நுட்பக்குழு ஒன்று 11ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் ஏற்படுத்தப்படும்.

தேசியச் சணல் நார் வாரியம் (National Jute Board): 2004-05ஆம் ஆண்டில் ஒரு குவின்டால் சணல் ரூ.890க்கு விற்கப்பட்டது. ஆனால் 2004-05 இல் இது 1250 ஆக அதிகரித்துள்ளது. தேவையைப் போதுமான அளவு சமாளிக்க சர்க்கரை மற்றும் தானியங்களுக்கான பாக்கெட்டுகள் அதிகமாக உருவாக்கப்படுகின்றன. முதன் முறையாக சணல் விளைப்போரின் நலனைப் பாதுகாக்கவும், சணலுக்கான தேவையை அதிகரிக்கவும், செறிவான தேசியச் சணல் நார் திட்டமொன்று (Comprehensive National Jute Policy) உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய சணல் கழக (Jute corporation of India) மறு சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது. சணல் தொழில்நுட்பக் குழு (Jute Technology Mission) ஒன்று சணல் தொழிலின் மேம்படுத்துதலுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. சணல் உற்பத்தியிலுள்ளப் பல்வேறு சணல் நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒன்றிணைக்கத் தேசிய சணல் ஆணையம் (National Jute Board) உருவாக்கப்பட்டது..

புது வாழ்வு திட்டம்

புது வாழ்வு திட்டமானது தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையால் செயல்படுத்தப்படும் ஆற்றல் வளர்ப்பு மற்றும் வறுமை ஒழிப்பு திட்டமாகும். இத்திட்டமானது சுமார் 6 ஆண்டுகளில் ரூபாய் 717 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். தமிழகத்தின் 16 மாவட்டங்களில் (புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பூர் மாவட்டம் உட்பட) உள்ள 70 பின்தங்கிய நிலையில் உள்ள ஒன்றியங்களுக்குட்பட்ட 2509 ஊராட்சிகளை இத்திட்டம் பயன்பெறச் செய்கிறது.  2005-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் துவக்கப்பட்ட போதிலும் திட்டத்தின் முழு அளவிலான செயல்பாடுகள் 2006-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில்தான் அமலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன..
இத்திட்டமானது தளர்த்தப்பட முடியாத திட்டக் கோட்பாடுகளைக் கொண்டு மக்களாலேயே செயல்படுத்தும் முறையின் மூலம் மக்கள், அவர்களின் தேவையை  அவர்களே கண்டறிந்து திட்டமிடுதல், செயல்படுத்துதல், கால அளவை நிர்ணயித்தல் மற்றும் கண்காணித்தல் ஆகியவற்றைப் பின்பற்றச் செய்கிறது.இதன் மூலம் புது வாழ்வு திட்டமானது மக்கள் திட்டம் என்ற வலுவான உணர்வை மக்களிடையே ஏற்படுத்தச் செய்கிறது.

மகப்பேறு நிதி உதவித்திட்டங்கள்

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் முக்கியமான திட்டங்களை முன்னின்று நிறைவேற்று வதிலும், டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் பெண்கள், குழந்தைகள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள் பற்றிய விவரங்களைக் கணினி மூலம் தினந்தோறும் பதிவு செய்வதற்காக கிராம சுகாதார செவிலியர்களுக்கு ஏற்படும் காலவிரயத்தினைக் குறைத்திடும் வகையிலும், அவர்கள் பணி மேம்பாடு அடையும் வகையிலும் செயல்படுகிறது.

தமிழ்நாடு அரசின் வீட்டுத் திட்டங்கள் 

நாட்டின் வீட்டுப் பற்றாக்குறையைப் போக்கும் விதமாக மத்திய அரசு, அனைவருக்கும் வீடு, ஸ்மார்ட் சிட்டி, அம்ரூத் நகரங்கள் என மூன்று திட்டங்களுக்கான வெவ்வேறு விதமான அறிவிப்புகளை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து குறைந்த வருவாய் ஈட்டும் மக்களுக்கான வீட்டுத் திட்டத்தைத் தமிழ்நாடு அரசும் அறிவித்துள்ளது..
அரசு அலுவலர்களுக்கெனத் தனியான வீட்டுத் திட்டமும் இத்துடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தையும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் செயல்படுத்தும். இதில் உருவாக்கப்பட உள்ள வீடுகள் இரண்டு படுக்கை அறை வசதிகள் கொண்ட வீடுகளாகும். ரூ.225 கோடி செலவில் இந்தத் திட்டம் உருவாக்கப்படவுள்ளது
அனைத்துத் தரப்பு மக்களுக்கான வீட்டு வசதித் தேவைகளை நிறைவேற்றும்வகையில் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், கடலூர், கிருஷ்ணகிரி, சேலம், மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் புதிய வீட்டுத் திட்டங்கள் உருவாக்கப்படவுள்ளன. இந்தத் திட்டங்களுக்கு ரூ. 674 கோடியே 96 லட்சம் செலவிடப்படவுள்ளது.

இந்திய உணவு கழகம்

இது ஒரு இந்திய அரசாங்கத்தின் அமைப்பு. இந்த அமைப்பு அரிசி, கோதுமை மற்றும் மற்ற அத்தியாவசியமான பொருட்களை பல்வேறு மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உள்ள உணவு ஒதுக்கீடு அமைச்சரகத்தின் ஆணைகள் படி மாநிலங்களுக்கு பரிமாற்றம் செய்கிறது.

பொது விநியோக திட்டம்

தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் குறிக்கோள், எல்லா குடிமக்களுக்கும் குறிப்பாக ஏழை மக்களுக்கு உணவு வழங்குதல் ஆகும். பொது விநியோக திட்டம், அத்தியாவசியமான பொருட்களை மலிவான விலையில் ஒவ்வொரு மாதமும் நியாய விலைக் கடைகள் மூலம் ஏழை மக்களுக்கு வழங்குகிறது.

 பொது விநியோக திட்டத்தின் நோக்கங்கள்

தமிழ்நாட்டில் உள்ள நீடித்த பட்டினி மற்றும் உணவு பற்றாக்குறையை நீக்க , அத்தியாவசியமான பொருட்களின் விலை உயர்வால் வரும் தவறான விளைவுகளில் இருந்து குடிமக்களை பாதுகாக்க,அத்தியாவசியமான பொருட்கள் வழங்குதல் மூலம், நுண் ஊட்டச்சத்து குறைப்பாட்டை குறைக்க, உள்நாட்டு எரிபொருள்களை (மண்ணெண்ணை மற்றும் எல்பிஜி) மலிவாக வழங்க,பயனாளிகள், நியாய விலைக் கடைகளை எளிதாக அணுக,ஏழை மக்களுக்கு அத்தியாவசியமான பொருட்களை மலிவான விலையில் வழங்க,ஒவ்வொரு மாதமும் சரியான நேரத்தில், அத்தியாவசியமான பொருட்களை வழங்க திட்டத்தைத் தமிழ்நாடு அரசும் அறிவித்துள்ளது.
தமிழக அரசு இலவச 104 மருத்துவ ஆலோசனை சேவை திட்டம்
104 தொலைபேசி மூலம் இலவச மருத்துவ ஆலோசனை பெறும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இலவசமாக மருத்துவ ஆலோசனை பெறும் புதிய சேவையை இதன்மூலம் 104 என்ற எண்ணுக்கு கட்டணமின்றி போன்செய்து இலவச மருத்துவ ஆலோசனைகளை பெறலாம். முதலமைச்சரின் விரிவுபடுத்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள வசதிகள் ஆகியவற்றுக்கான ஆலோசனைகளை இனி இலவசமாக பெறலாம்.குறிப்பிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ மனைகள் மற்றும் நிலையங்கள் பற்றிய தகவல்கள், மனநல ஆலோசனைகள், எச்.ஐ.வி., பால்வினை நோய்கள் பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களையும் கேட்டு தெளிவு பெற முடியும்.