Natural-Farm

விவசாயத்தை மீட்போம்

இயற்கை வழி விவசாயம், ஆரோக்கியமான உணவு மனிதன் மட்டுமல்லாது பல உயிரினங்கள் இயற்கையை சார்ந்தே உயிர் வாழ்கின்றன, ஒரு உயிரினம் மற்றொரு உயிரினத்தை சார்ந்தே வாழ்ந்து கொண்டிருக்கின்றன பலதரப்பட்ட உயிரினங்கள் தாவரத்தை சார்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றன. விவசாயம் இயற்கை நமக்கு அளித்துள்ள மிகப்பெரிய கொடை, அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த விவசாயம் அழிந்துவிட்டால் மண்ணில் உயிரினங்கள் வாழ்வது கடினமாகிவிடும். விவசாயம் அழிந்துவிட்டால் மனிதர்கள் உயிர் வாழ சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு.
உழவு அல்லது வேளாண்மை அல்லது விவசாயம் அல்லது கமம் என்பது உணவுக்காகவும் ஏனைய பயன்பாடுகளுக்காக சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்யவும் கால்நடை வளர்ப்பையும் குறிக்கும்.

வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும் இத்தொழிலில் மனிதன் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருட்கள் சேமித்து பயன்படுத்திக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவ்வியற்கையோடு ஒன்றிணைந்து பணியாற்றி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்கிறான். வீட்டு விலங்குகளின், தாவரங்களின், உற்பத்தியைக் கொண்டு நாகரிகங்களுக்கு வழிவகுத்த சிறப்பான மானிடவியல் வளர்ச்சி வேளாண்மை ஆகும்.

நாம் வாழும் இந்த பூமியில் அனைவருக்கும் இன்றி அமையாது உணவு. உணவு இல்லாமல் எவராலும் உயிர் வாழ முடியாது எமது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அத்தகைய அரும் பெரும் உணவை நமக்கு தருபவன் விவசாயி. விவசாயம் நம் நாட்டின் முதுகெலும்பு, விவசாயிகள் நம் நாட்டின் கண்கள் என்பார்கள். உணவு கொடுப்பவர்கள் உயிர் கொடுத்த கடவுளுக்கு சமமாக பார்க்கப்பட வேண்டும். அனால் இன்று விவசாயிகளும் விவசாயமும் அழிந்து வரும் நிலை ஏற்பட்டு உள்ளது. மனிதனின் ஆக்கபூர்வமான சில செயல்கள் விவசாயிகளின் அழிவுக்கு காரணமாகி வருகிறது என்பது தான் மறுக்க முடியாத உண்மை. மனிதன் உருவாக்கிய 4G, 5G தொழில்நுட்பங்கள் விவசாயத்தை அழிக்கும் பூச்சிகளை உண்ணும் பறவைகளை அழித்து வருகிறது இதனால் விவசாயிகளின் நிலமை மோசமாக உள்ளது இதுபோன்ற பல இன்னல்களை கடந்து பயிர் சாகுபடி செய்த பொழுதும் அதற்கான சரியான விலை கிடைக்காத நிலைமையில் விவசாயிகள் உள்ளனர்.

அடுத்தகட்டமாக பயிரிடுவதற்கான போதிய பணம் இல்லாத சூழ்நிலையில் விவசாயிகள் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் பயிர்களுக்கான போதிய வருமானம் கிடைக்காததினால் அவர்களால் கடனை திருப்பி செலுத்த முடியாத சூழ்நிலையில் தவிக்கின்றார்கள். விவசாய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் பல விவசாயிகளின் உயிர் இழப்பும் நேரிடுகிறது இதனால் படித்த இளைஞர்கள், பட்டதாரிகள் விவசாயம் செய்ய முன்வர மறுக்கின்றார்கள். இதனால் விவசாயம் அடுத்தகட்ட தலைமுறைக்கு ஒரு சவாலாக இருக்கிறது இளைஞர்களும் அடுத்தகட்ட தலைமுறையினரும் விவசாயத்தின் முக்கியத்துவத்தை அறிந்து அதனை மீட்டெடுக்க வேண்டும்.

இன்றைய இளைஞர்களிடம் விவசாயமானது அடிப்படை கல்வியாக இருக்கவேண்டும். இனிவரும் காலங்களில் விவசாயத்தை அடிப்படை கல்வியாக அமைப்பதே இதற்கான சிறந்த தீர்வாக இருக்கும். விவசாயத்தை அடிப்படை கல்வியாக கொண்டுவரும் பட்சத்தில் அதனை அனைத்து மாணவ மாணவிகளும் அறிந்து அதனை மீட்டெடுக்கும் விழிப்புணர்வு அவர்களிடையே தோன்றும், இளைஞர்களிடம் விவசாயத்தைப் பற்றிய விழிப்புணர்வு இருத்தல் அவசியம், விவசாயத்தையும் விவசாயிகளையும் மீட்டெடுப்பது இளைஞர்களாகிய நம்முடைய கடமையாகும். இவைகள் மட்டுமல்லாது இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் ஆரோக்கியமான உணவு என்பது மிகவும் அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் பயிர்களின் மீது தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளும், பயிர்களுக்கு இடப்படும் செயற்கையான உரங்களும் ஆகும். இயற்கையான உரங்கள் ஆரோக்கியமான உணவிற்கு வழிவகை செய்கிறது. பலதரப்பட்ட மக்களும் ஆரோக்கியமான இயற்கை வழி உணவுகளை நாடி செல்கின்றனர்.

இயற்கை சாகுபடி செய்வதற்கான பல வகையான ரசாயன உரங்கள் பூச்சிக்கொல்லி மருந்துகள் வேளாண் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் விளைவாக நம் முன்னோர்கள் சாகுபடி செய்த பாரம்பரியமிக்க நெல் ரகங்கள் படிப்படியாக மறையத் துவங்கியது  ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்துவதால் மண் வளம் பாதிக்கப்பட்டு விளைநிலங்கள் பாலைவனமாக மாறி வருகிறது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக நவீன ரக நெல்லில் இருந்து கிடைக்கும் அரிசியை சமைத்து சாப்பிடும் மனித இனம் வித விதமான நோய் தாக்குதலுக்கு உள்ளாகி பரிதவித்து வருவதை காண முடிகிறது. கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படும் வைக்கோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது
இயற்கை வழி விவசாயம் அழிந்து கொண்டு வருவதால் அது மிகவும் அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது, இதனால் ஆரோக்கியமான இயற்கை பயிர்களை வாங்குவதற்கு அதிக விலை கொடுத்து வாங்கும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் விவசாயிகள் இயற்கை வழி விவசாயத்தை பின்பற்றுவது இதற்கு தீர்வாக அமையும். அனைவரும் இயற்கை வழி விவசாயத்தை பின்பற்றுவது அடிப்படையான ஒன்றாக நமது அரசாங்கம் கொண்டு வர வேண்டும். இளைஞர்கள் இயற்கை வழி விவசாயத்தின் முக்கியத்துவத்தை அறிந்து அதனை கையாண்டு வரவேண்டும் அதற்கு அவர்களிடையே இயற்கை வழி விவசாயத்திற்கான விழிப்புணர்வு இருப்பது அவசியமான ஒன்றாக இருக்கிறது. இதற்காக தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் பாரம்பரியமிக்க நெல் விதைகளை தேடி கண்டுபிடித்து அவற்றை இயற்கை விவசாய முறையில் சாகுபடி செய்து விதைகளாக மாற்றி விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். எதிர்காலத்தில் நம் சந்ததியினர் உடல் ஆரோக்கியத்துடன் நோயற்ற வாழ்வு வாழ வேண்டும் என விரும்பினால் நம் முன்னோர்கள் பயன்படுத்திய பாரம்பரியமிக்க நெல் ரகங்களை சாகுபடி செய்ய விவசாயிகள் அனைவரும் முன்வரவேண்டும்