வெற்றி மந்திரங்கள்


வெற்றி மந்திரங்கள்

சாதனை படைக்க வா நண்பா வா!!

மனிதன் வாழ்க்கையில் வெற்றி பெற பல வெற்றி மந்திரங்களை கையாண்டு வருகிறான். அவற்றுள் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுவது தன்னம்பிக்கை. தன்னம்பிக்கை என்பது ஒவொரு மனிதனும் தன்னால் ஒரு செயலை செய்து முடிக்க முடியும் என்று முழு மனதுடன் நம்புவது. வாழ்க்கையில் மற்றவர்களை நம்புவர்களை காட்டிலும் தன்னை நம்பியவர்களே உலகில் அதிகம் சாதனையாளர்களாக இருக்கின்றார்கள். தன்னம்பிக்கை ஒன்று இருந்தால் போதும் சிகரத்தையும் தொடலாம், வானத்தையும் எட்டலாம். ஒரு சிறு சிந்தனை சிந்திப்போம் இன்னும் எத்தனை காலம் தான் மற்றவர்களை எதிர் பார்த்து காலம் கழிக்க போகிறோம். தாய் தந்தையை தவிர மண்ணில் நமக்காக வாழ்பவர் மண்ணில் எவரும் இல்லை என்ற உண்மையை மனிதா நீ உணர்ந்துக்கொள். வாழ்க்கை ஒரு முறை தான் அதனை உனக்காக வாழ் அதனை தன்னம்பிக்கையோடு வாழ் மனிதா.

வாழ்கையில் சாதிக்க ஆயிரம் வழிகள் இருப்பினும் தன்னம்பிக்கை ஒன்றே அதன் திறவுகோலாக பயன்படுகிறது. ஒரு மனிதன் தன்னம்பிக்கையுடன் ஒரு செயலை செய்ய முற்படும் போது அதனை நிச்சயம் வெற்றிகரமாக செய்து முடிப்பான் என்பதுதான் உலக நியதி அதனை யாராலும் தடுக்க முடியாது. ஒரு செயல் செய்தாலும் அதனை தன்னம்பிக்கையோடு செய் வெற்றி உனதே அந்த கடவுள் கூட உன் வசம் ஆவார். உன் தன்னம்பிக்கையை தகர்த்து உன்னை வெல்லும் ஆயுதம் கூட இந்த உலகில் உண்டோ. திடம் கொள் வெற்றி  நிச்சயம். ஒரு நாளைக்கு ஒரு முறையாவது நீங்கள் உங்களுடன் பேசுங்கள் நீ சாதிக்க பிறந்தவன் என்று உங்களுக்குள் நீங்களே பேசிக்கொள்ளுங்கள். எத்தனை துன்பங்கள் வாழ்க்கையில் சந்திக்க நேர்ந்தாலும் தன்னம்பிக்கையை மட்டும் இழந்துவிடாதீர்கள்.

உங்கள் மனதுடன் நீங்கள் பேசும் பொழுது மனதில் உள்ள குழப்பங்கள் தெளியும் உங்கள் மீது புதிதாக ஒரு நம்பிக்கை உங்களுக்குள் தோன்றும். உன்னால் முடியும் என்ற வார்த்தையை மட்டும் மனதில் ஆணித்தரமாக விதையுங்கள். திறமை என்ற ஒன்றினால் மட்டும் அனைத்து காரியங்களும் கை கூடாது. நம் திறமையுடன் கூடிய தன்னம்பிக்கையும் இருந்தால் மட்டுமே நினைத்த செயலை செய்ய முடியும். வெற்றி என்னும் வேட்கை உன்னுள் இருக்கும் வரை தோல்வி என்னும் தடைகள் உன் கண் முன்னே காணப்படுவது இல்லை. யாவும் சத்தியமே உன் மனதில் தெளிவும் திடமும் இருந்தால் அதனை செய்து முடிக்க கூடிய துணிவு உன்னுள் இருந்தால் எவற்றையும் நீ செய்து முடிப்பை. இந்த உலகத்தில் அதுவாகவே நிகழ்வது உன் பிறப்பும் இறப்பும் மட்டும் தான். மற்ற அனைத்தையும் நிகழ்த்துவது உன் தன்னம்பிக்கையும் முயற்சியும் மட்டுமே என்பதனை உணர்ந்துக்கொள். நம்பிக்கை கொள் வெற்றி நிச்சயம்

வெற்றி மந்திரங்களில் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுவது முயற்சி. முயற்சி என்பது மனித முதுகு எலும்பு போன்றது, முதுகு எலும்பு ஒரு மனிதனுக்கு எவ்வளவு முக்கியமோ அதனை காட்டிலும் வாழ்க்கையில் மிக முக்கியமானது முயற்சி. ஒரு செயலை நாம் செய்ய முற்படும் போது சில சமயங்களில் நாம் தோல்விகளை தழுவி இருப்போம் இருப்பினும் அதனை நாம் பொருட்படுத்தாமல் விடா முயற்சியை விடாமல் பிடித்து கொண்டோமேயானால் வெற்றி நமதே. முயற்சி இன்றி ஒரு செயலை செய்யும் பொழுது அதில் நாம் தோல்வியை சந்திக்கொறோம். இதனை தான் திருவள்ளுவர்

முயற்சி திருவினை யாக்கும் முயற்சியின்மை 
இன்மை புகுத்தி விடும்.

என்ற திருக்குறளில் விடா முயற்சி செல்வதை உண்டாக்கவும் வளர்க்கவும் செய்யும், அம்முயற்சி இல்லாமை ஒருவனை வறுமைக்கு உட்படுத்தும்என முயற்சியை பற்றி குறிப்பிட்டுள்ளார். இதுமட்டும் அல்லாது முயற்சியின் சிறப்பினை கண்டு முயற்சி என்ற அதிகாரத்தில் திருக்குறள்கள் எழுதியுள்ளார். ஒரு காரியம் கடவுளால் கூட செய்ய முடியாத சூழல் வரும் அனால் முயறிச்சி கொண்டு ஏக்கரியாதையும் செய்து முடிக்க கூடிய வல்லமை பெற முடியும். எந்த ஒரு காரியத்தையும் விடாமல் திரும்ப திரும்ப செய்ய முயற்சி செய்கின்ற பொழுது அதனை பற்றிய அனுபவங்கள் நமக்குள் அதிகரித்து கொண்டே போகும் இறுதியில் அந்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

முயற்சி திருவினையாக்கும்

முயற்சியினை மூச்சு காற்றென சுவாசியுங்கள், அது இல்லாமல் ஒரு மனிதன் உயிர் வாழ முடியாது. கோபுரங்களை தங்குவது தூண்கள் உன் உடல் என்னும் கூட்டில் உன் உயிரை தங்குவது தான் முயற்சி. தொடர் முயற்சின் வலியையும், சுகத்தையும் உணர்பவனுக்கு வெற்றி வெகு தூரத்தில் இல்லை.

ஒரு பெரிய சாதனை என்பது சில சின்ன சின்ன விஷயங்களையும் முயற்சியுடன் மிக சரியாக செய்வது. சாதனையாளர்களின் வாழக்கையை சற்று புரட்டி பாருங்கள். எத்தனை இன்னல், எதனை தோல்வி, எதனை ஏமாற்றம் இவை அனைத்தும் அவர்களின் வாழ்க்கையை புரட்டி போட்ட போதிலும் அவர்களை வெற்றி அடைய செய்தது அவர்களின் விடா முயற்சி தான். எதிர் கொள்ள நேர்கிற அணைத்து சவால்களும் அவர்களின் பலதை பறைசாற்றுவதற்கு கிடைத்த வாய்ப்பு. பெரும்பாலான சாதனைகள் சுலபமாக நடை பெற்று விட்டால் முயற்சி என்ற சொல்லுக்கு பொருள் இல்லாமலேயே போய் விடும்.


            முயற்சி செய் வெற்றி உனதே