மாணவர்களின் வாழ்க்கை

மாணவர்களின் வாழ்க்கை வினாக்களில் தொடங்குகின்றது!!! 

இன்று நம் குழந்தைகள் ஒரு குறுகிய வட்டத்திற்குள் வளர்கின்றன.
உலகம் பரந்து விரிந்து கிடைக்கின்றது அதில் நாம் ஒரு இயந்திர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அதனால் குழந்தைகளின் கனவுகளையும் நம்மை அறியாமல் சிதைத்துக்கொண்டிருக்கின்றோம். அன்று கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை நிறந்திருந்தது குழந்தைகளுடன் குடும்பமாக வாழத் தொடங்கினர் அவர்களது வாழ்க்கைமுறை அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, சித்தப்பா என்று மிகப்பெரிய ஒரு கூட்டு சொந்தங்களோடு வாழ்ந்து கொண்டிருந்தோம்.

 குழந்தைகளை தங்களது கேள்விக்கணைகளை தனது தாத்தா, பாட்டி பாட்டியிடம் கேட்பார்கள். அது சரியா தவறா என்ற ஒரு சிறந்த பதில்களை அவர்கள் தங்கள் அனுபவத்தின் மூலம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து வளர்த்தனர். நமது வாழ்க்கை முறை சமூக சிந்தனை கலாச்சாரம் ஆகியவற்றை மேம்படுத்த குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்தனர். குழந்தைகளுக்கு முதல் ஆசானாக பிள்ளைகளுக்கு கேட்கும் கேள்விகளுக்கு நான் நல்லதொரு பதிலை தந்து அதன்நன்மை தீமைகளை எடுத்துரைத்தனர். ஒரு அரசனைப் போல பாதுகாத்து பேரன்புடன் வளர்த்தார்கள்.

பெற்றோர்களும் குழந்தைகளும் 

இன்று குழந்தைகளின் எதிர்காலத்தை பெற்றோர்கள் தீர்மானிக்கிறார்கள் இது மிகப்பெரிய தவறாகும் இது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும்.  பெற்றோர்கள் இயந்திர வாழ்க்கை வாழத் தொடங்கி விட்டார்கள்.  குழந்தைகளுடன் செலவிட நேரம் ஒதுக்குவதில்லை. இதன் காரணமாக பிள்ளைகள் பாசம் போராட்டத்துக்கு ஆளாகிறார்கள். பெற்றோர்கள் குழந்தைகள் நெருக்கம் குறைகின்றது. பெற்றோர்கள் நன்னெறிகளை பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க தவறுகிறார்கள் இதுதான் உண்மை சில பிள்ளைகளின் கேள்விகள் மிகுந்த ஆச்சரியமாக இருக்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் கேட்கிற கேள்விகளுக்கு பதில் கூற மறுக்கின்றனர் அல்லது அவர்கள் வேலை நிமித்தமாக சிலர் பதில் கூறுவதில்லை மாறாக மாறாக கொள்கின்றனர்.  இது ஒரு மிகப்பெரிய தவறாகும் இதனால் குழந்தைகளின் புத்திக் கூர்மையும் படாமல் போகலாம் ஆனால் பெற்றோர்கள் பிள்ளைகள் நற்பண்புகளை கூற வேண்டும் அவர்கள் நிறைய கால நேரங்களை ஒதுக்கி அவர்களை மேம்படுத்த வேண்டும்.

  குழந்தைகளின் ஆசிரியர்கள் 

குழந்தைகளுக்கு விதிமுறைகள்  இல்லை பல்வேறு கேள்விகளுடன் பள்ளி வகுப்பறைகளில் நுழைகின்றனர். அவர்கள் கற்பனை திறன் மிகவும் ஆழமானதாக அவர்கள் கடவுள் ஆசிர்வாதம் பெற்றோர்கள். குழந்தைகளின் வினாக்கள் அங்கும் செவிசாய்க்கவில்லை இது மிகப்பெரிய சமூக குற்றமாகும். பல ஆசிரியர்கள் வகுப்பறைகளில் குழந்தைகள் மேம்பாட்டுக்கான பாடங்களை சொல்லிக் கொடுக்கின்றனர் பல்வேறு வினாக்களுக்கு அங்குதான் விடை அளிக்கப்படுகின்றது அல்லது மேம்படுத்த படுகின்றன அது ஆசிரியரின் கடமையாகும். சில ஆசிரியர்கள் கடமைகளை சரிவர செய்வதில்லை இது பல குழந்தைகளின் எதிர்காலத்தை இருட்டாகின்றது. ஆசிரியர், பெற்றோர்கள் ஆகியோர் குழந்தைகளின் மேம்பாட்டு திறன் கல்வி அறிவு ஆகியவற்றை கூர்ந்த அறிந்து குழந்தைகளின் மேம்பாட்டுக்கு வழிவகை செய்ய வேண்டும். தினமும் குழந்தைகளுடன் உரையாடி மகிழ்வித்து அவர்களது சிறகுகளை விரிக்கச் செய்து வளமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும்.

மாணவர்களின் தேடல்

இன்று பள்ளிகளில் மாணவர்கள் கேட்கும் கேள்விகளை எதிர்கொள்ளும் ஆசிரியர்கள் பலர் இப்போதும் எப்போதும் இருக்கிறார்கள். இவர்கள் மாணவச் செல்வங்களை சிந்திக்க வைக்க வேண்டும் கற்பனைத் திறனை மேம்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கிறார்கள் மாணவர்கள் எப்படி கற்க விரும்புகிறார்கள் என்று அவற்றை புரிந்து கொண்டவர்கள், மாணவர்களுக்கு ஆசிரியர்கள் யார் எளிமையாக பாடம் நடத்துகிறார்கள் அவர்களை நன்றாக பிடிக்கும் கேள்விகளைக் கேட்டு தெரிந்து கொள்வார்கள்.  சில சமயங்களில் மாணவர்களை அடித்து துன்புறுத்தும்  ஆசிரியர்களை நாம் கேள்விப்படுகிறோம் ஒரு ஆசிரியர் மாணவர் கேட்கும் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் போவதால் இவ்வாறு நடக்கின்றது. ஆசிரியர்கள் நான் தேடி உங்களுக்கு கூறுகிறேன் என்று பெருந்தன்மையாக நடந்து கொள்பவர்கள் உண்டு இப்படி ஆசிரியர்கள் தங்கள் பள்ளி பணிகளை கடமை உணர்வோடு செய்ய வேண்டும் அப்படி செய்தால் ஆசிரியர்கள் மாணவர்கள் உறவுகள் மேலும் நல்லொழுக்கம் அங்கே விதைக்கப்படும்.

ஆசிரியர் மாணவர் ஒழுக்கம்

ஒரு ஆசிரியர் மாணவர்களிடம் நல்ல இருக்கும் கற்பிக்கும் ஆசானாக விளங்கி வேண்டும் தனது மாணவர்களை தன் இமை போல் பாதுகாத்து நல்ல அறிவுரை வழங்க வேண்டும்.ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வி அறிவை தனது  அனுபவ அறிவைக் கொண்டு எளிமையாக கடைசி மாணவனுக்கு புரியும்படியாக சொல்லிக் கொடுக்க வேண்டும். சில ஆசிரியர்கள் தனது வகுப்பு முடிந்தவுடன் மாணவர்களுக்கு மாலை நேர வகுப்பு என்று கூறிய அதிகமாக கல்வியைப் இருக்கவும் செய்கின்றனர். தனது வகுப்பறை பாடத்தை சொல்லிக் கொடுக்காமல் பின்பு மாலை நேரத்தில் மிகப்பெரிய சொல்லிக்கொடுப்பது குற்றமாகும் இதில் பல்வேறு மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் சில ஏழை எளிய மாணவர்கள் தங்களால் கூடுதல் பணம் செலவழித்து மாலை நேரக் கல்வி கற்க முடியாமல் போகலாம் அவ்வாறு செய்வது ஆசிரியரின் மிகப்பெரிய தோல்வியாகும். ஆசிரியரை மாணவர்கள் கல்வி கற்பிக்கும் ஆசான் பார்க்கின்றனர். கல்வியை பிறருக்கு போதனை செய்பவர்கள் இப்படிப்பட்ட சூழ்நிலையில் கல்வி விற்பனை செய்து செய்கிறார்கள்,  தவறு செய்கிறார்கள்.
 மாணவர்கள் தங்களது விளையாட்டு பயிற்சி நேரம் தவறாமல் செய்ய வேண்டும் பாரதி கூறிய கொண்டு மாலை முழுவதும் விளையாட்டு என்ற கோட்பாட்டையும் தவறாமல் செய்யவேண்டும் அவ்வாறு தவறு செய்யும் மாணவர்களை கொண்டு நன்றாக கற்று திறம்பட செயல்பட வேண்டும் கோட்பாடுகளும் ஆசிரியர் மீது புகார் அளிக்கப் பட வேண்டும்.