environment-day
சுற்றுச்சூழல்

சுற்றுச்சூழல்

ஜூன் 5 ஆம் தினம் உலக சுற்றுச்சுழல் தினம்

சுற்றுச்சூழல் ஒரு உயிரினத்தை அல்லது மக்கள் தொகையைச் சுற்றியுள்ள உயிர் உள்ள, மற்றும் உயிரற்ற கூறுகள் அனைத்தையும், அவற்றின் விளைவாக குறிப்பிட்ட உயிரினம் அல்லது மக்கள் தொகையின் பிழைப்புத் திறன், விருத்தி, படிவளர்ச்சி அல்லது கூர்ப்பு ஆகியவற்றில் தாக்கம் செய்யக்கூடிய அனைத்துக் காரணிகளையும் உள்ளடக்கிய இயற்கைச் சூழலைக் குறிக்கின்றது. உயிரினங்கள் அவற்றின் இயல்பு வாழ்க்கை வாழ்வதற்கான இயறைக்கையாக அமைய கூடிய சூழல். ஒவொரு உயிரினங்களும் உயிர் வாழ்வதற்க்காக அவற்றின் சூழலுக்கு ஏற்றவாறு சுற்றுப்புறம் அமைக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது சுற்றசூழலை தனிமனிதனோ, அமைப்போ, அல்லது அரசாங்கமோ இயற்கை சூழலுக்காகவும், மனிதனின் நன்மைக்காகவும் பாதுகாக்கும் ஒரு பழக்கமாகும்.
 எந்த ஒரு உயிரினமும் அவை உயிர் வாழ்வதற்கு ஏற்றவாறு வெப்பநிலை, ஒளி, ஈரப்பதம், மண், ஊட்டச்சத்து, போன்ற காரணிகள் அவற்றில் தாக்கம் செலுத்தும். சுற்றுச்சூழலியல் என்பது உயிரியற்பியல் சூழலில் நிகழும் இடைத்தொடர்புகள் பற்றிக் கற்கும் அறிவியல் ஆகும். காற்று இல்லாமல் வாசக்குடிய நுண்ணுயிர்கள் தமது வளர்சிதை மாற்றச் செயல்முறையின்போது, கார்பனீராக்சைட்டை உடைத்து ஆக்சிசனை உருவாக்கியதால் ஏற்பட்ட மாற்றமாகும். இதன் பின்னர் ஆக்சிசனைப் பயன்படுத்தும் தாவரங்கள், மற்றும் விலங்குகள் உருவாகின.
மனிதன் உட்பட அனைத்து ஜீவன்களும் வாழ்வதற்கு ஏற்ற இடம்தான் இந்த புவிமண்டலமாகும். இந்த புவி மண்டலம் அப்படிப்பட்ட இந்த பூமி சீராக இயங்குவதற்கு ஐந்து வகையான சக்திகள் தேவை அவை…

நிலம்
நீர்
காற்று
ஆகாயம்
நெருப்பு

இந்த ஐந்து வகையான சக்திகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டுதான் வளம் வர இயலுமே தவிர இந்த ஒன்றில் ஏதாவது குறைபாடு ஏற்பட்டு விட்டால் இந்த உலகம் அதிகப்படியான ஆபத்துகளை சந்திக்க நேரிடும்
ஒவ்வொரு மனிதனும் சுற்றுசூழலை பற்றி அறிந்திருப்பது அவசியமாகிறது நாம் வாழும் இந்த பூமியின் அடிப்படை தகவல் அறிவை நாம் பெற்றிருக்க வேண்டும். நாம் வாழும் இந்த முபையானது அணைத்து ஜீவா ராசிகளுக்கும் சொந்தமானது அனால் இதனை மனிதன் தன்னுடைய சுய நலத்துக்காக சீரழித்து வரு என்பது தான் மறுக்க முடியாத உண்மை ஒவ்வொரு தனி உயிரினமும், தனக்கான ஒரு சூழலைக் கொண்டிருக்கின்றது எனக் கொண்டால், எண்ணிக்கையில்லா உயிரியற்பியல் சூழல்கள் இருப்பதை அறியலாம். சுற்றுச்சூழல் என்ற சொல் சமூக சூழல் மற்றும் பொருளாதார சூழல் என்ற சொற்களுடன் முரண்படலாம். பல சந்தர்ப்பங்களில் சூழல் என்ற சொல் இயற்கை சூழலைக் குறிக்கிறது. சூழலை நிலைமை என்றும் குறிப்பிடலாம்.

சூழலியல் என்பது சுற்றுச் சூழலியலினதும், உயிரியலினதும் ஒரு பகுதியாகும். சுற்றுச் சூழலியல் என்பது மிகவும் பரந்த ஒரு கற்கைத் துறையாகும். சூழலியம் என்பது சமூக மற்றும் மெய்யியல் சார்ந்த ஒரு பெரிய இயக்கமாகும். புவியியல் சார்பான தகவல்களைப் உள்ளடக்கி உயிரியற்பியல் சூழலை ஆராய்வதும், இது தொடர்பான கற்கை நெறிகளுள் ஒன்றாகும்.

ஜூன் 5 ஆம் தினம் உலக சுற்றுச்சுழல் தினமாக கொண்டாடப்படுகிறது.
அனைவருக்கும் மிக முக்கியமா அமைந்துள்ள இந்த பூமியை தூய்மையுடனும் பாதுகாப்புடனும் கவனித்துக்கொள்வது ஒவொரு தனி மனித கடமையாகும். சுற்றுசூழல் பாதுகாப்பு என்பது சுற்றசூழலை தனிமனிதனோ, அமைப்போ, அல்லது அரசாங்கமோ இயற்கை சூழலுக்காகவும், மனிதனின் நன்மைக்காகவும் பாதுகாக்கும் ஒரு பழக்கமாகும்.

மக்கள்தொகையினாலும் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் சுற்று சூழல் சில நேரங்களில் அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. மனித நடவடிக்கைகளினால் சுற்றுச்சூழலில் தாக்கம் எந்த அளவிற்கு ஏற்படுகின்றது என்பது தெளிவாக தெரியவில்லை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் சில சமயங்களில் கடுமையாக விமர்சிக்கபடுகின்றன. சுற்றுச்சூழல் சட்டங்கள், நெறிமுறைகள் மற்றும் கல்வி மூன்றும் பின்னிப்பிணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு வழிவகுக்கின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய கலந்துரையாடல்கள் பெரும்பாலும் அரசாங்கத்தின் பங்கு, சட்டம் மற்றும் சட்ட அமலாக்கத்தைப் பற்றிய கவனம் செலுத்துகின்றன. எனினும் இதில் தனி மனிதனின் பங்கு மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

மனித இனம் கல்வியறிவு பெற்று இவற்றின் ஆபத்தை அறிந்திருந்த போதிலும், மாற்றக்கூடிய சமுதாய மாற்றங்களில் இதுவும் ஒன்று என்ற எண்ணத்தில் இதைப் பெரிதுபடுத்துவதில்லை. இதனால் மனித இனத்திற்கு பெரும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. மனிதர்களின் நடவடிக்கைகளால் பிற்காலத்தில் அவர்களது சந்ததியினருக்கும், சமுதாயத்திற்கும் வரப்போகும் பின்விளைவுகளைப் பற்றி, அபாயத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டு, அதனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் செய்யப்படுகின்றன.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அனைத்து ஐரோப்பிய சமூக நிறுவனங்களுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர் நாடுகளுக்கும் மாஸ்ட்ரிச்ட் ஒப்பந்தத்திற்கு பின்னர் முக்கிய பணியாக உள்ளது.
சுற்றுச்சூழலை கெடுத்துக்கொண்டு இருப்பவன் மனிதன் மட்டுமே. மனிதனின் சுயநலத்திற்காகவும், கொள்ளை லாபத்திற்காகவும் இயற்கையைச் சுரண்டி அழித்துக்கொண்டிருக்கிறான். சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுப்பதற்கான சட்டங்கள் இருப்பினும், சட்டத்தில் உள்ள ஓட்டையைப் பயன்படுத்திக்கொண்டு சட்டவிரோதமாக இயற்கையை அழித்துவருகின்றனர். சுற்றுச்சூழலை பாதுகாக்க உலகில் பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.

மரங்களையும், காடுகளையும் மண்ணையும், கடலையும், விலங்குகளையும் பாதுகாக்க பல அமைப்புகளும், பல தனி மனிதர்களும் போராடி வருகின்றனர். இயற்கையை பாதுகாக்க விஞ்ஞானிகள், தலைவர்கள் மட்டுமல்லாமல் சாதாரண பெண்கள்கூட தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர். இந்த பூமியில் உள்ள வளங்களையும், தாவரங்களையும், இயற்கையையும் பாதுகாக்க வேண்டும். நமது அடுத்த தலைமுறைக்கு சுற்றுச்சூழல் மாசு அடையாமல் பாதுகாத்து கொடுக்க வேண்டியது நமது கடமையாகும்.