நாடோடி மாணவர்களுக்கு,அவர்கள் மொழியிலேயே பாடம் சொல்லிக்கொடுக்க்கும் ஆசிரியை !!

 

“வ்ஹானே தான் காதோ?” - கீதா டீச்சர்
நாடோடி சமூகத்தினர் குழந்தைகள் நிறைந்திருக்கும் வகுப்பறையில் அவர்களின் மொழியிலேயே வகுப்பை ஆரம்பிக்கிறார் ஆசிரியை கீதா. ‘`யெஸ் டீச்சர். வி ஹாவ் ஃபினிஷ்டு அவர் ஹோம்வொர்க். லெட் அஸ் ஸ்டார்ட் தி கிளாஸ்’’ என்று கோரஸாக ஆங்கிலத்தில் சொல்கிறார்கள் மாணவர்கள்.

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் (மேற்கு) கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்தான் இந்த அற்புதக் காட்சி. இந்தப் பள்ளியில் கணிசமான எண்ணிக்கையில் படிக்கும் நாடோடி சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு, அவர்கள் மொழியிலேயே பாடம் சொல்லிக்கொடுக்கிறார் ஆசிரியர் கீதா. அதோடு, பள்ளிக்குப் பல நாள்கள் வராமல் இருப்பது மற்றும் இடைநிற்பது ஆகிய பிரச்னைகளைக் குறைத்திருப்ப தன் மூலம் அந்த மாணவர்களின் கல்வித்தரத்தையும் உயர்த்தி வருகிறார்.

“வ்ஹானே தான் காதோ?” - கீதா டீச்சர்
“எனக்குச் சொந்த ஊர், கடலூர் மாவட்டம் எசனூர். படிச்சது நெய்வேலியில். 10, 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்தேன். மெடிக்கல் கட் ஆஃப்ல ஐந்து மார்க் குறைஞ்சதால டாக்டர் ஸீட் கிடைக்கலை. இன்ஜீனியரிங் ஸீட் கிடைச்சும், எனக்கு அதில் ஆர்வமில்லை. டீச்சராகணும்னு ஆசைப்பட்டேன். வடலூர்ல டீச்சர் ட்ரெயினிங் கோர்ஸில் சேர்ந்தப்போ, என் பேச்சுத்திறமையைச் சக ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தினாங்க. ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டியில முதல் பரிசு வாங்கினேன்.

“வ்ஹானே தான் காதோ?” - கீதா டீச்சர்
அரசுப் பள்ளிகளுக்குக் கற்பித்தல் பயிற்சிக்குப் போனப்போ, கல்வி ஒன்று மட்டுமே ஒரே நம்பிக்கையா இருக்கும் குடும்பங்களில் இருந்து வந்திருக்கும் அந்த ஏழைக் குழந்தைகளின் நிலையையும், அவங்க எதிர்காலத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பங்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் உணர்ந்துகொண்டேன். ‘ஏன் பாடம் படிக்கலை?’னு கேட்கிற ஆசிரியையா இருக்கிறதைவிட, அவங்களை பாடம் படிக்கவிடாம செய்ற அவங்க வீட்டுச் சூழல் என்ன என்கிற புரிந்துணர்வோடு அவர்களின் கல்வியை அணுகணும்னு முடிவெடுத்தேன்’’ என்பவருக்கு, வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக 2006-ல் பூவனூர் கிராமத்திலுள்ள ஓர் அரசுப் பள்ளியில் வேலை கிடைத்திருக்கிறது. ஐந்தாண்டுகள் அங்கு பணியாற்றிய காலத்தில், கீதாவுக்குத் திருமணம் நடந்திருக்கிறது.

“வ்ஹானே தான் காதோ?” - கீதா டீச்சர்
“பூவனூர் பள்ளியைத் தொடர்ந்து, 2011-ல் இப்போ வேலைசெய்ற பெண்ணாடம் ஸ்கூலுக்கு மாறுதலானேன். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள இந்த ஸ்கூல்ல, நாடோடி சமூகத்தினரின் பிள்ளைகள்தான் அதிகமா படிக்கிறாங்க. பெற்றோர் இந்தக் குழந்தைகளை, திருவிழா நேரத்தில் ஊசி, பாசி விற்க, ஜோதிடம் பார்க்க அழைச்சுட்டுப் போயிடுவாங்க. இதனால் அவங்க ஸ்கூலுக்கு வரமுடியாம போயிடும். பெற்றோர் காலையில் சீக்கிரமா வேலைக்குப் போயிட்டா, அந்தக் குழந்தைங்க வீட்டிலேயே இருந்துடுவாங்க; அல்லது விளையாடப் போயிடுவாங்க. இதனால குழந்தைகளோட படிப்பு பாதிக்கப்படுவது தொடர்கதையா இருந்தது’’ எனும் கீதா, அதற்கு ஒரு தீர்வை யோசித்திருக்கிறார்.

“வ்ஹானே தான் காதோ?” - கீதா டீச்சர்
‘` ‘ஃபுல் மன்த் அட்டெண்டன்ஸ் பிரைஸ்’னு குழந்தைகளை ஊக்கப்படுத்துற ஒரு முயற்சியை ஆரம்பிச்சேன். அதன்படி, ஒவ்வொரு மாதமும் லீவ் போடாமல் பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு, அவங்க படிப்புக்கு உதவும் ஸ்டேஷனரி பொருள்கள், லஞ்ச் பாக்ஸ், வாட்டர் பாட்டில் போன்றவற்றைப் பரிசா கொடுக்கத் தொடங்கினேன். இதனால் குழந்தைகள் லீவு போடுறது குறைய ஆரம்பிச்சது. மாசத்துக்குச் சராசரியா 10 குழந்தைங்க லீவ் போடாமல் பரிசு வாங்கிட்டிருக்காங்க. எல்லோரும் படிப்புலயும் நல்லா கவனம் செலுத்துறாங்க. ஆனா, இங்கிலீஷ் மொழிப்பாடம் மட்டும் சவாலா இருந்துச்சு” என்பவர், அவர்களுக்குப் புரியும்வண்ணம் நாடோடி சமூகத்தினர் மொழியிலேயே ஆங்கிலம் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்.

“வ்ஹானே தான் காதோ?” - கீதா டீச்சர்
“எழுத்துகள் அற்ற ஒலி வடிவம் மட்டுமே இருக்கிற அவங்களோட ‘வக்ரி போலி’ மொழியை, அவங்ககிட்ட இருந்து நான் கத்துக்க ஆரம்பிச்சு, அந்த மொழியிலேயே அவங்களுக்குப் பாடம் நடத்த ஆரம்பிச்சேன். இந்த முயற்சி, ஆங்கில மொழி மேல அவங்களுக்கு இருந்த தயக்கத்தைப் போக்கி, ‘இவங்க நம்ம டீச்சர்’னு என் மேல அதிக விருப்பத்தைக் கொடுத்தது. ஆர்வமா படிக்க ஆரம்பிச்சாங்க. இப்போ அந்தக் குழந்தைங்க எழுதுறது, வாசிக்கிறது மட்டுமல்லாம, ஸ்போக்கன் இங்கிலீஷ் அளவுக்கு முன்னேறியிருக்காங்க. நானும் தொடர்ந்து ‘வக்ரி போலி’ மொழியைக் கத்துட்டிருக்கேன். அந்த மொழி வாயிலாகவே பாடம் சொல்லிக்கொடுக்கத் தொடங்கியிருக்கேன்’’ என்று நம்மை வியப்பில் ஆழ்த்தியவர் நிறைவாக,

“இந்தக் குழந்தைங்க படிக்கிறதுல ஆர்வமும் திறமையும் உள்ளவங்களா இருக்காங்க. ஆனா, ‘இவங்களும் நாமளும் வேற வேற’ என்ற எண்ணத்தைத் தர்ற மொழி, அவங்களுக்கு ஒரு தயக்கம் தந்தது; தடையா இருந்தது. அதைத் தகர்க்கத்தான் இந்த முயற்சி. வழி எதுவா இருந்தா என்ன... அவங்களுக்கு விஷயம் போய்ச் சேரணும்னு நினைச்சேன். அதுக்குப் பலன் கிடைச்சிருக்கு. கல்வி அறிவு கிடைச்சு அவங்க வாழ்க்கைத் தரம் உயரணும் என்பதே என் நோக்கம். முன்பெல்லாம் பள்ளிக்கே சரியா வராத இந்தக் குழந்தைகள் பலர், இன்று என்னோடு சேர்ந்து பல மேடை நிகழ்ச்சிகள்ல பேச்சாளராகவும் கலக்கிட்டிருக் காங்க” - முகத்தில் புன்னகையும் மகிழ்வும் விரிய சொல்லும் கீதா, தன் மாணவர்களை வாஞ்சை யுடன் கட்டியணைத்துக்கொள்கிறார்.

நீங்கள் மேலும்
3
கட்டுரைகளை படிக்கலாம்
மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்
Login
அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்கசந்தா செய்யுங்கள்
Subscribe
ஆசிரியர்
teacherஉங்களுக்கு பிடித்தவை
டெல்லியில் மூன்றாவது முறையாக அரியணையில் கெஜ்ரிவால்... ஆம் ஆத்மி மகுடம் சூடியது எப்படி?

மோகன் இ
டெல்லியில் மூன்றாவது முறையாக அரியணையில் கெஜ்ரிவால்... ஆம் ஆத்மி மகுடம் சூடியது எப்படி?
வெளியேறிய 50 லட்சம் பேர்; ஒரே நாளில் 108 பேர் பலி... வெளியே வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! #Corona

எம்.குமரேசன்
வெளியேறிய 50 லட்சம் பேர்; ஒரே நாளில் 108 பேர் பலி... வெளியே வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! #Corona
டெல்லி தேர்தல் முடிவுகள்: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு குவியும் வாழ்த்துகள்! #LiveUpdates

தினேஷ் ராமையா
டெல்லி தேர்தல் முடிவுகள்: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு குவியும் வாழ்த்துகள்! #LiveUpdates
``காதலில் நான் ரெண்டாவது வகைங்ணா!" - வித் லவ் விஜய் #VikatanOriginals

விகடன் டீம்
``காதலில் நான் ரெண்டாவது வகைங்ணா!" - வித் லவ் விஜய் #VikatanOriginals
`அத்தை, உங்க பொண்ணு தூக்குமாட்டிக்கிட்டா..!’ -மாமியாருக்கு அதிர்ச்சி கொடுத்த மருமகனின் போன்கால்

லோகேஸ்வரன்.கோ
`அத்தை, உங்க பொண்ணு தூக்குமாட்டிக்கிட்டா..!’ -மாமியாருக்கு அதிர்ச்சி கொடுத்த மருமகனின் போன்கால்
கு.ஆனந்தராஜ்Follow
Contributions :
எஸ்.தேவராஜன்
விகடனின் பிரைவசி மற்றும் குக்கீ பாலிசிகளை ஏற்பதன் மூலம் உங்களுக்கு இத்தளத்தில் நிறைவான அனுபவம் கிடைப்பதை உறுதி செய்ய உதவுங்கள்.