கேள்வி எண் 119 : கருணைக்கொலை செய்வது சரியா?.

பதில்: கருணைக் கொலை செய்வது தவறு.

கருணைக்கொலை என்றால் என்ன ? யாராவது நோயினால் அல்லது மனக் குழப்பத்தினால் தாங்கமுடியாத வலியையோ  வேதனையையே அனுபவித்துக் கொண்டிருக்கும் பொழுது , இந்த வலியை வேதனையை  அனுபவிப்பதை விட உயிரை விடுவதே சிறந்தது என்று முடிவெடுத்து அவரை கொலை செய்வதே கருணை கொலை ஆகும்.

இதைத்தான் அகோரிகள் செய்வதாக கூறுகிறார்கள்.

மருத்துவர்கள் சட்டப்படி செய்வதாக கூறுகிறார்கள்.

சட்டப்படி யாரையும் கொள்ளக் கூடாது . அப்படி கருணைக்கொலை செய்ய வேண்டுமென்றால் அரசாங்கத்தின் அனுமதி வாங்கிவிட்டு செய்யலாம் என்று கூறுகிறார்கள்.

ஆனால் என்னைப் பொருத்தவரை அரசாங்கம் அனுமதி கொடுத்தாலும் கருணைக்கொலை தவறு தான் .

ஒரு உயிர் எப்பொழுது போக வேண்டும் என்று இறைவன் மட்டுமே முடிவெடுக்க வேண்டும். அடுத்த உயிரை கொள்வதற்கு மனிதர்களுக்கும் , மருத்துவர்களுக்கும்,  அகோதரிகளுக்கும் எந்த உரிமையும் கிடையாது , அனுமதியும் கிடையாது.

ஒருவேளை ஒரு மனிதர் வலி தாங்க முடியாமல் வேதனை தாங்க முடியாமல் இருந்தால்,  அவரே முடிவெடுத்து "  நான் இனிமேல் வாழ்ந்து பிரயோஜனமில்லை இருந்துவிடலாம் " என்று மனதால் நினைத்தால் அந்த உயிர் தானாக போய்விடும்.

கர்மா தியரி என்று யூட்யூபில் பேசியிருக்கிறேன் அதை கேளுங்கள்.புரியும்.

உயிர் போகாமல் ஒருவர் ஒரு வலியில் துன்பத்தில் வேதனைப் படுகிறார் என்றால்,  ஒன்று அவருக்கு அந்த வலியும் வேதனையும் அனுபவிக்க வேண்டும் என்று விதி இருக்கிறது.  அல்லது அந்த மனிதனுக்கு உயிர் போகக்கூடாது என்று நினைத்து பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறார். அதை போக்க வைப்பதற்கு நீங்கள் யார்?

நமது கடமை நம்மால் முடிந்த அளவு உதவி செய்வது பணிவிடை செய்வது சிகிச்சை செய்வது மட்டுமே. உயிரோடு வாழ வேண்டுமா? உயிர் போக வேண்டுமா? என்பதை மட்டும் இறைவனிடம் விட்டு விடுங்கள்.

ஒருவேளை நாம் செய்த பணிவிடையாலோ அல்லது சிகிச்சையாலோ  அவர் குணமாகி விட்டால்,  அதற்காக நாம் பெருமைப் படக் கூடாது.

ஒருவேளை நாம் சிகிச்சை அளித்து,  பணிவிடை செய்து, உதவி செய்து அவர் குணமாகாமல் உயிர் போய்விட்டால் அதற்காக வருத்தப்படவும் கூடாது.

நாம் எப்பொழுதும் நம் கடமையை மட்டுமே செய்து கொண்டிருக்க வேண்டும்.

மருத்துவர்கள் இருக்கட்டும் , அகோரிகளாக இருக்கட்டும்,  எவனாக இருக்கட்டும், எவளாக இருக்கட்டும்,  சட்டப்படியாகவே இருக்கட்டும் அடுத்த உயிரை கொல்வதற்கு அனுமதியும் இல்லை , உரிமையும் இல்லை.

எனவே கருணை கொலையை நான் வன்மையாக கண்டிக்கிறேன்

அரசாங்கம் பெருசா???.  சட்டம் பெருசா ? இறைவன்  பெருசா???.

சிந்தியுங்கள்!!!!

இப்படிக்கு.
ஹீலர் பாஸ்கர்.
PH : +91 - 9842452508.