கேள்வி எண் 117 : கேஸ் சிலிண்டர் பற்றிக்கொண்டால் எப்படி தீயை அணைப்பது?

பதில் : கேஸ் சிலிண்டர் வாய் பக்கத்தில் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரியும் பொழுது,  அதில் தண்ணீரை ஊற்றக்கூடாது.

உடனடியாக ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டை எரியும் சிலிண்டருக்கு மேலே கை வைத்து விட்டால் உடனே தீ அணைந்துவிடும்.

அந்த பிளாஸ்டிக் பக்கெட் மிகப் பெரியதாக இருக்க கூடாது, அதே சமயத்தில் சிறியதாக இருக்கக் கூடாது,  சிலிண்டரின் கழுத்துப்பகுதியில் உட்காரும் அளவிற்கு அழவாக இருக்க வேண்டும் என்பது முக்கியமான விஷயம்.

அடுத்த வினாடியே பிளாஸ்டிக் பக்கெட்டை எடுத்தால் அங்கு தீ இருக்காது அமைந்திருக்கும்.

ஆனால் கேஸ் கசிந்து கொண்டிருக்கும்.

உடனடியாக கேஸ் கசிவதை நிறுத்திவிட்டால் மிகப் பெரிய தீ விபத்தில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம்.

இந்த எளிமையான அனைவருக்கும் சொல்லிக்கொடுங்கள். இந்த சிறு விஷயம் தெரிந்து வைத்துக் கொள்வதால் மிகப் பெரிய ஆபத்தில் இருந்து நாம் தப்பிக்கலாம்.

இப்படிக்கு.
ஹீலர் பாஸ்கர்.
இயற்கை சமையல் கற்றுக்கொள்ள " லெமோரியா சமையல் கலை " என்ற புத்தகத்தை  படியுங்கள்.
+91 - 9629032767.

கேள்வி 118 : புழுவெட்டு அல்லது பூச்சி பெட்டுக்கு இயற்கை வைத்தியம் என்ன?

பதில்:

1.: மாங்கொட்டை பருப்பை தண்ணீர்விட்டு அம்மியில் அல்லது மிக்ஸியில் அரைத்து காலை தலையில் தேய்த்து , கால் மணி நேரம் காத்திருந்து,  அதன் பிறகு குளித்து வந்தால் புழுவெட்டு பூச்சிவெட்டு சரியாகும்.

2 : நிலை அவரை பொடியையும் கசகசாவையும் சேர்த்து அரைத்து , பாலில் கலந்து , புழுவெட்டு உள்ள இடங்களில் தேய்த்து , கால் மணி நேரம் காத்திருந்து பிறகு குளித்து வந்தால் சரியாகும்.

3. ஆறு வேப்பம் விதையையும் , இரண்டு வெண் மிளகையும்,  கொஞ்சம் கடுக்காய் பொடியையும்,  கொஞ்சம் காய்ந்த நெல்லிக்காய் பொடியையும் கலந்து தண்ணீர் விட்டு அரைத்து அதை புழுவெட்டு உள்ள இடங்களில் தடவி , கால் மணி நேரம் காத்திருந்து பிறகு குளித்தால் சரியாகும்.

4. விளக்கு எண்ணெயில் நிலை அவரை பொடியை அரைமணி நேரம் ஊறவைத்து,  அதை எடுத்து புழுவெட்டுள்ள இடங்களில் தடவி கால் மணி நேரம் காத்திருந்து அதன் பிறகு குளித்தால் சரியாகும்.

இந்த வைத்தியத்தை எனக்கு கற்றுக்கொடுத்த பொள்ளாச்சி ஹீலர் குமார் அவர்களுக்கு நன்றி

இப்படிக்கு.
ஹீலர் பாஸ்கர்.