👆👆👆👆👆👆காலை வழிபாட்டுச்  செயல்பாடுகள்

இன்றைய
திருக்குறள்

குறள்எண்- 836

அதிகாரம் - பேதமை

பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
 பேதை வினைமேற் கொளின்.

மு.வ உரை:

ஒழுக்க நெறி அறியத பேதை ஒருச் செயலை மேற்கொண்டால் (அந்த செயல் முடிவுபெறாமல்) பொய்படும், அன்றியும் அவன் குற்றவாளியாகித் தளை பூணுவான்.

கருணாநிதி  உரை:

நேர்மை வழி அறியாத மூடர், மேற்கொண்ட செயலைத் தொடர முடியாமல், அதனால் அச்செயலும் கெட்டுத் தம்மையும் தண்டித்துக் கொள்வர்.

சாலமன் பாப்பையா உரை:

செய்யும் வழி தெரியாத அறிவற்றவன் ஒரு செயலைச் செய்யத் தொடங்கினால் செயலும் கெட்டு, அவனும் கெட்டுப் போவான்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

உலகம் உன்னை அறிவதை விட உன்னை உலகிற்கு அறிமுகம் செய்து கொள்ள முயற்சியுடன் செயல்படு. பயந்தால் நாம் வரலாறு படைக்க முடியாது.
 - அப்துல் கலாம்

✡✡✡✡✡✡✡✡
பழமொழி மற்றும் விளக்கம்

ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன் ஆவான்.

பொருள்:
ஆயிரம் மக்களை (நோயாளிகளை) கொன்றவன் பாதி வைத்தியன்.

உண்மையான பொருள்:

ஆயிரம் வேரை கொண்டவன் அரை வைத்தியன் ஆவான்.
நோயை போக்க ஆயிரம் வேரை கொண்டு மருந்து கொடுப்பவன் அரை வைத்தியன் ஆவான்.

🔱🔱🔱🔱🔱🔱🔱
Important  Words

1. Maize - சோளம்
2. Wheat - கோதுமை
3. Paddy - நெல்
4. Jute - சணல்

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. இந்தியாவின் ஜப்பான் எது ?

 சிவகாசி

2. பைக்காரா அணை எந்த மாவட்டத்தில் உள்ளது ?

  நீலகிரி

📫📫📫📫📫📫📫📫
விடுகதை

1. காசியிலிருந்து கொல்கத்தா வரை ஆடாமல் அசையாமல் போகிறது. அது என்ன ?

 இரயில் தண்டவாளம்

2. மஞ்சள் சட்டை மாப்பிள்ளை , மணமணக்கிறார் வீட்டிலே- அது என்ன ?

 எலுமிச்சை

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !விவசாயம்!

இஞ்சி

🍙 11-ம் நூற்றாண்டில் இஞ்சி வர்த்தகத்தில் முதலிடம் வகித்த அரேபியர்கள், வர்த்தக பரிமாற்றத்தில் இஞ்சியை பயன்படுத்தினார்கள்.

🍙 பழங்காலத்தில் உலகளவில் பழக்கத்தில் இருந்த பாரம்பரிய மருத்துவ முறையில் 50% மருந்துகள் இஞ்சியையே மூலப்பொருளாக கொண்டிருந்ததாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

🍙இஞ்சி உணவின் ருசி கருதி, இந்திய, சீன உணவுகளில் சேர்த்துக் கொள்ளப்படும் ஒரு நறுமணப் பொருளாகும்.

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

கொடுக்கும் கை கீழே வாங்கும் கை மேலே

அக்பர் சபையில் அமர்ந்து அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திக்கொண்டிருக்கையில் ஒரு சந்தேகம் எழுந்தது.

உடனே அமைச்சர்களை நோக்கி, பொதுவாக ஒருவர் தானம் கொடுக்கின்றார் என்றால் அவரது கை உயர்ந்தும், வாங்குபவரின் கை தாழ்ந்தும் இருப்பது உண்மை.

ஆனால் தானம் கொடுக்கும் சமயத்தில் கொடுப்பவர் கை தாழ்ந்தும் பெறுபவரின் கை உயர்ந்தும் இருப்பது எந்த சமயத்தில்? என்று கேட்டார்.

அவையில் இருந்த அமைச்சர்களுக்கு எவ்வளவு யோசித்தும் விடை தெரியவில்லை. அந்த சமயத்தில் பீர்பால் சபைக்கு வந்து அமர்ந்தார். இதே கேள்வியை பீர்பாலிடமும் அக்பர் கேட்டார். அதற்கு பீர்பால், ஒருவர் மூக்குக்குப் பொடி போடும்போது மற்றொருவர் கொஞ்சம் மூக்குப் பொடி தாருங்கள் எனக் கேட்டால் அச்சமயத்தில் அவர் தன் கையில் இருக்கும் மூக்குப்பொடி டப்பியை அவர் முன் நீட்டுவார். மூக்குப் பொடியை எடுப்பவர் கொடுப்பவரின் கையைவிட எடுப்பவரின் கை சற்று மேலே இருக்கும்.

ஆகையினால் மூக்குப் பொடி தானம் தரும் சமயம் கொடுப்பவரின் கை கீழேயும் - வாங்குபவரின் கை மேலேயும் உயர்ந்திருக்கும் என்றார். தன்னுடைய கேள்விக்கு உடனே பொருத்தமான பதில் அளித்த பீர்பாலை அக்பர் மிகவும் பாராட்டினார்.

நீதி :

தானம் கொடுப்பவர் கை மற்றும் பெறுபவரின் கை உயர்ந்து, தாழ்ந்து இருப்பது அவரவர் கொடுக்கும் தானத்தைப்பொறுத்து மாறுபடும்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮சென்னை உயர்நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக ஏ.பி சாஹி பதவியேற்றார்.

🔮ஆந்திராவில் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி குறித்து அம்மாநில முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி கருத்து தெரிவித்துள்ளார்.

🔮ஈரான் இரண்டாவது அணு உலை கட்டுமானத்தை துறைமுக நகரமான புஷெரில் தொடங்கியுள்ளது.

🔮காற்று மாசு தொடர்பாக சமூக வலைதளங்களில் ப‌ரப்ப‌ப்படும் தகவல்களை நம்பவேண்டாம் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

🔮ஆசிய துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற மேலும் 3 இந்திய வீரர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி.


🔮போக்குவரத்து சேவையினை மேம்படுத்தும் வகையில் அரசு ரூ.23 ஆயிரம் கோடி ஒதுக்கீடு முதல்கட்டமாக 100 ஏசி பஸ்கள் தயாரிப்பு: சாலை போக்குவரத்து நிறுவனம் திட்டம்.

HEADLINES

🔮Stipulated time over for sanction to prosecute nearly 100 govt. officials: CVC.

🔮HRD Minister stuck inside auditorium for over 6 hours as JNU students protest.

🔮Lata Mangeshkar in ICU, sister Usha says she is recovering.

🔮Airbus flies 150-seat jet to Bengaluru for demo.

🔮Justice A P Sahi sworn-in as Madras High Court Chief Justice.
🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪