6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 3,4,5 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக பிரச்சார இயக்கம் மற்றும் டிசம்பர் 5 ம் தேதி வட்டாரக்கல்வி அலுவலகங்கள் முன்பு பெருந்திரள் முறையீடு நடத்துவது குறித்து இராமேஸ்வரத்தில் நடைபெற்ற மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் - பொதுச்செயலாளர் அறிக்கை

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
tnptfayan.

பேரன்புமிக்க பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்.

மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண் : 19/2019 நாள்: 17.11.2019

⚔ 
🛡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் இராமேஸ்வரத்தில் நடைபெற்றது.

⚡கூட்டத்திற்கு மாநில தலைவர் தோழர்.மூ. மணிமேகலை, தலைமை வகித்தார்.

⚡இராமநாதபுரம் மாவட்டச்செயலாளர் தோழர்.சே.முத்துமுருகன் வரவேற்புரை ஆற்றினார்.

⚡சங்கத்தின் வரவு-செலவு அறிக்கையை மாநிலப் பொருளாளர் தோழர்.க. ஜோதிபாபு சமர்ப்பித்தார்.

⚡மாநிலப் பொதுச்செயலாளர் தோழர்.ச. மயில் கூட்டப்பொருள்களின் மீது கருத்துரை வழங்கினார்.

⚔ 
🛡கூட்டத்தில் மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்தும், தேசத்தின் ஏழை, எளிய, கிராமப்புற குழந்தைகளின் எதிர்காலக் கல்வியைப் பாதிக்கும் தேசியக் கல்விக் கொள்கை - 2019 ஐ திரும்பப் பெறுதல், தன் பங்கேற்பு ஓய்வூதியத்திட்டத்தை ரத்துசெய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 08.01.2020 அன்று மத்திய தொழிற்சங்கங்கள் நடத்தவுள்ள ஒருநாள் அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பங்கேற்பது எனவும், சங்க உறுப்பினர்களான 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை வேலைநிறுத்தத்தில் பங்கேற்கச் செய்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
 

🛡தமிழக அரசு 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்று ஆணை பிறப்பித்து அதை நடைமுறைப் படுத்துவதற்கு எடுத்துவரும் நடவடிக்கைகள் உளவியல் ரீதியாக மாணவர்களின் கல்வி நலனுக்கும், மாணவர்களின் மனநிலைக்கும் முற்றிலும் ஊறு விளைவிக்கக் கூடியதாகும். தமிழக அரசின் இந்நடவடிக்கைக்கு பெரும்பாலான கல்வியாளர்களும், உளவியல் நிபுணர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். பிஞ்சுக் குழந்தைகளுக்கு தேர்வு பயத்தையும், கற்றலின் மீது வெறுப்பையும் ஏற்படுத்தும் என்பதால் 5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற ஆணையைத் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.


🛡03.02.2017 அன்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 15 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் டி.பி.ஐ வளாகம் முன்பு நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தின் போது பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.


🛡EMIS புள்ளி விவரங்கள் உள்ளிட்ட இணையதளப் பயன்பாடுகளை கையாளுவதற்குரிய எவ்விதமான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளும் பள்ளிகளில் இல்லாத சூழலில் தலைமை ஆசிரியர்களைக் கட்டாயப்படுத்துவது என்பது அவர்களது கற்பித்தல் பணியைப் பாதிப்பதாகவும், மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. எனவே மேற்கண்ட EMIS உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கு வட்டார அளவில் ஊழியர் ஒருவரை தமிழக அரசு உடனடியாக நியமித்திட வேண்டும்.


🛡மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளை கண்காணிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண்கள்: 145, 202, ஆகியவற்றைத் திரும்பப்பெற வேண்டும்.


🛡ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் பங்கேற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது தமிழக அரசு மேற்கொண்டுள்ள ஒழுங்கு நடவடிக்கைகளை நல்லெண்ண அடிபடையில் தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


🛡மேற்கண்ட தீர்மானங்களை தமிழக அரசு நிறைவேற்றக்கோரி வரும் டிசம்பர் 3, 4, 5 தேதிகளில் பிரச்சார இயக்கம் நடத்துவதெனவும், டிசம்பர் 5 ஆம் தேதி வட்டாரக்கல்வி அலுவலகங்கள் முன்பு பெருந்திரள் முறையீடு நடத்துவதெனவும், 04.01.2020 அன்று மாவட்ட அளவில் தர்ணா போராட்டம் நடத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

⚡துணைப்பொதுச்செயலாளர் தோழர்.தா.கணேசன் நன்றி கூறினார்.

⚡கூட்டத்தில் STFI பொதுக்குழு உறுப்பினர் தோழர்.ச.மோசஸ் உட்பட மாநில நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் மாநிலம் முழுவதுமிருந்து கலந்து கொண்டனர்.

🤝தோழமையுடன்;

ச.மயில்,
மாநில பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.