🔥  T  N  P  T  F  🔥
🛡  விழுதுகள்  🛡


👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫

2050 ஐப்பசி 26 ♝ &   12•11•2019

🔥
🛡எட்டாம் வகுப்பு பொது தேர்வை ஏப்ரல் முதல் வாரத்தில் நடத்த  பள்ளிக்கல்வித் துறை திட்டம்.

🔥
🛡2018-19-ஆம் கல்வியாண்டில் +2 பயின்ற மாணாக்கர்களுக்கு மடிக்கணினி வழங்குதல் சார்ந்து  வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் தெளிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

🔥
🛡அரசுப் பள்ளிகளுக்கு சத்தான காலை உணவு, மாணவர்களுக்கு ஊக்கப் பரிசு, சான்றிதழ்கள், பள்ளிகளில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்குப் புத்தாடைகள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என நெகிழ வைக்கிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த துபாய் வாழ் தமிழர் ரவி சொக்கலிங்கம் - நாளிதழ் செய்தி

🔥
🛡School Grant (SG) - எந்த பணிக்கு எவ்வளவு செலவிடுதல் வேண்டும் - அரசுப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கி
வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்  உத்தரவு.

🔥
🛡சத்துணவு அமைப்பாளர், சமையலர் காலிப்பணியிடங்களை சமையலர் மற்றும் உதவி சமையலர் மூலமாக 25% பதவி உயர்வு மூலம் நிரப்ப உத்தரவு.

🔥
🛡NET தேர்வு : தேர்வறை நுழைவுச் சீட்டு வெளியீடு (தேர்வு நாள் 04.12.2019) -
தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு.

🔥
🛡கடந்த 9ம் தேதி நிறுத்தப்பட்ட காவலர் உடற்தகுதி தேர்வு &  சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் மீண்டும் வரும் 18ம் தேதி முதல் தொடர்ந்து நடைபெறும் - கூடுதல் காவல்துறை இயக்குநர் அறிவிப்பு.

🔥
🛡உள்ளாட்சி தேர்தலுக்கு தேவையான, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஓட்டுப் பெட்டிகளை தயார் நிலையில் வைக்கும்படி, கலெக்டர்களுக்கு, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

🔥
🛡நெட் தேர்வு தேதியை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) அறிவித்துள்ளது. அதன்படி, டிசம்பா் 4-ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. அதையடுத்து, விண்ணப்பதாரா்களுக்கான தேர்வறை நுழைவுச் சீட்டுகளை என்.டி.ஏ. வெளியிட்டுள்ளது.

🔥
🛡தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் மாடித்தோட்டம் அமைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு!

🔥
🛡பள்ளிக்கல்வி துறையில் நேற்று துவங்கியது ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு தொடங்கியது. மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான மாறுதல் நிகழ்வு நடைபெற்றது.