பதில் : திறமை இன்றி பெரும் கனவு கண்டால் அது நடக்கும்,  ஆனால் அந்த இடத்தில் நிலைத்து இருக்க முடியாது , அதாவது stand செய்ய முடியாது,  சஸ்டைன் செய்ய முடியாது பண்ண முடியாது , அதாவது நீடித்திருக்க முடியாது.

உதாரணத்திற்கு பவர் ஸ்டார் சீனிவாசன் என்ற நடிகனுக்கு திறமை இல்லை , ஆனால் கனவு கண்டார்,  எனவே அவர் சினிமாவில் நடித்து விட்டார்,  ஆனால் நினைத்து இருக்க முடியவில்லை.

ஆனால் ரஜினி,  கமல் ஆகியோர்கள் திறமையும் இருந்தது,  கனவு கண்டார்கள் எனவேதான் அவர்கள் ஜெயித்தார்கள்.

எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர் செல்வம் ஆகிய இருவருக்கும் கனவு காண தெரிந்தது, ஆனால் திறமை இல்லை. எனவே அவர்கள் முதலமைச்சராகி விட்டார்கள் ஆனால் மக்களிடம் MGR போன்று வாங்க முடியவில்லை.

ஆனால் MGR ம் , கருணாநிதியும் திறமையும் இருந்தது அதே சமயத்தில் கனவு கண்டார்கள். எனவே நீடித்து இருக்க முடிந்தது.

பலருக்கு திறமை இருக்கிறது , ஆனால் அவர்கள் முன்னேறுவதும் இல்லை , ஜெயிப்பதில்லை . ஏனென்றால் அவர்களுக்கு கனவு காண தெரியவில்லை. பாசிட்டிவாக பேசத் தெரியவில்லை . நேர்மறை சிந்தனையுடன் இருக்க தெரியவில்லை. அப்ளை செய்ய தெரியவில்லை,  எனவே அவர்களால் ஜெயிக்க முடியவில்லை.

ஆனால் சிலர் கனவு காண மட்டும் தெரிந்து இருக்கிறது,  ஆனால் திறமை இல்லை.  எனவே அவர்கள் பாதி ஜெயித்து , நீடித்து , நிலைக்க முடியாமல் அவர்கள் ஓடிப்போய் விடுகிறார்கள்.

எனவே முழுமையான வெற்றி என்பது திறமையும் இருக்க வேண்டும் , கனவு காண வேண்டும். இரண்டும் எப்பொழுது ஒருவருக்கு வருகிறதோ அவர்கள் தான் ராஜா அல்லது  ராணி. அவரின் அருகே யாரும் செல்ல முடியாது. அவர்கள் ஜெயித்துக் கொண்டே தான் இருப்பார்கள். அது எந்த துறையாக இருந்தாலும் சரி.

எனவே திறமை மட்டும் இருந்தால் கனவு காண ஆரம்பியுங்கள். கனவு மட்டும் இருந்தால் திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள். கண்டிப்பாக நீங்களும் ஒருநாள் ஜெயிக்கலாம்.

சீக்ரெட் என்ற படத்தை பாருங்கள்,  ரங்கராட்டின ரகசியம் என்ற எனது வீடியோவை கேளுங்கள் கண்டிப்பாக உங்களுக்கு புரியும்.

சீக்ரெட் படம்  தமிழில் -  you tube link ( https://youtu.be/2On5qmY8VF8 ).

ரங்கராட்டின ரகசியம்-  you tube link ( https://youtu.be/4f0xIMAz1os ).

இப்படிக்கு.
 ஹீலர் பாஸ்கர்.
ஃபேஸ் புக்:
https://www.facebook.com/healerbaskar/