பதில் : இதற்கு காரணம் மூளைக்கு ரத்த ஓட்டம் குறைவாக இருப்பதே.

இதற்கு தீர்வு,

ஒரே ஒரு வெள்ளை பூண்டு பல்லை கடுகு போல குட்டி குட்டியாக கட் செய்து , இரவு சாப்பாட்டிற்குப் பிறகு , தூங்குவதற்கு முன்பு , வாயில் போட்டு கடிக்காமல் மெல்லாமல் லேசான சுடு நீரை ஊற்றி முழுங்கிவிட வேண்டும்.

தினமும் இரவு இப்படி செய்தால் இரவு முழுவதும் மூளைக்கு ரத்த ஓட்டம் செல்லும் காலையில் தலை சுற்றாது.

இப்படிக்கு
ஹீலர் பாஸ்கர்
pH : +91-9944221007.

கேள்வி எண் 114: நாடி சுத்தி மூச்சு பயிற்சி என்பது இரு நாசியிலும் மாறிமாறி மூச்சு இழுத்து விட வேண்டும் என்று சொல்கிறார்கள்.

எனக்கு ஒரு நாசிகள் வழியாக மட்டுமே காற்று உள்ளே சென்று வெளியே வருகிறது மற்றொரு நாசி எப்பொழுதுமே அடைத்திருக்கிறது.

இதன் காரணம் என்ன? தீர்வு என்ன?

பதில் : இதற்குக் காரணம் உங்கள் உடல் ஆரோக்கியமாக இல்லை என்று அர்த்தம்.

எனவே நீங்கள் முதலில் உடல் பயிற்சிகள் சூரிய நமஸ்காரம் ஆசனங்களை வாக்கிங் ஜாக்கிங் மற்றும் ஸ்கிப்பிங் போன்ற உடல் சம்பந்தப்பட்ட பயிற்சிகளை மட்டும் செய்யுங்கள்.

மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டாம்.

வாரம் ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்

எப்பொழுது இருபக்கமும் மூச்சுக்காற்று சென்று வருகிறதோ அப்பொழுது மூச்சுப்பயிற்சி செய்தால் போதும்.

உடலை ஒழுங்கு செய்த பிறகுதான் மூச்சை ஒழுங்கு செய்ய முடியும்.

அன்னமய கோசம் என்ற உடல் ஒழுங்காக இருந்தால்தான் பிராணமய கோசம் என்ற மூச்சு ஒழுங்காக இருக்கும்.

பிராணமய கோசம் ஒழுங்காக இருந்தால்தான் மனோஅமய கோசம் எனப்படும் மனம் ஒழுங்காகும்.

எனவே முதலில் உடலை ஒழுங்கு செய்யும் பயிற்சிகளை மட்டும் செய்துவாருங்கள்.

உங்களுடன் ஆரோக்கியம் அடைந்தபிறகு மூச்சுப் பயிற்சி செய்யலாம்.