🐤🐤 மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் இன்று நடக்க உள்ளது. அதேபோல் தமிழகத்தில் 2 தொகுதிகளில் சட்டசபை இடைத்தேர்தல் நடக்கிறது.🐤🐤

🐤🐤🐤இரண்டு மாநில சட்டசபை தேர்தல் மற்றும் 51 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடக்கிறது. தமிழ்கத்தில் உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடக்க உள்ளது.🐤🐤🐤

🐤🐤இதில் மகாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தல் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கடந்த 2 மாதங்களாக மகாராஷ்டிரா தேர்தல் தேசிய அரசியலில் முக்கிய பங்கு வகித்தது. மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 தொகுதிகள் உள்ளது. இதில் 124-ல் சிவசேனா போட்டியிடுகிறது. 164 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.
அதேபோல் இன்னொருபுறம் காங்கிரஸும் தேசியவாத காங்கிரஸும் கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கிறது.🐤🐤

🐤🐤காங்கிரஸ் கட்சி 147 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 121 இடங்களிலும் போட்டியிடுகிறது.4,28,43,635 பெண்கள் உட்பட 8,98,39,600 பேர் இந்த தேர்தலில் மகாராஷ்டிராவில் வாக்களிக்கிறார். மொத்தம் 96,661 வாக்குச்சாவடிகள் இதற்காக அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3237 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 6.5 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணியை செய்து வருகிறார்கள். 1,85,000 பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.🐤🐤

🐤🐤ஹரியானாவில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் இருக்கிறது. 7 மணிக்கு தொடங்கும் தேர்தல் மாலை 6 மணிக்கு முடிகிறது. இங்கு பாஜகதான் ஆட்சி நடத்தி வருகிறது. இங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி இடையேதான் பிரதான போட்டியாகும்.🐤🐤

🐤🐤மொத்தம் 85 லட்சம் பெண்கள் உட்பட 1.83 கோடி பேர் இந்த தேர்தலில் ஹரியானாவில் வாக்களிக்கிறார்கள். மொத்தம் 19578 வாக்குச்சாவடிகள் இதற்காக அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3237 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.3.8 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணியை செய்து வருகிறார்கள். 75000 பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.🐤🐤

🐤🐤🐤தமிழகத்தில், நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் எச். வசந்தகுமார். இவர் கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராக தேர்வானார். இதனால் தன்னுடைய நாங்குநேரி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.இதையடுத்து அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு இன்று தேர்தல் நடக்கிறது.🐤🐤🐤
🐤🐤🐤
நாங்குநேரியில், அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன், போட்டியிடுகிறார். திமுக கூட்டணியிலுள்ள காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன் களமிறக்கிவிடப்பட்டுள்ளார்.🐤🐤