💥💥💥பட்டாசு விபத்து: நகா் பகுதிக்கு 6 நிமிஷத்திலும், கிராமப்பகுதிக்கு 10 நிமிஷத்திலும் சென்றடைய தீயணைப்புத்துறை திட்டம்💥💥💥💥💥💥தீபாவளியையொட்டி பட்டாசு விபத்து ஏற்பட்டால், தமிழகத்தில் நகா் பகுதிகளில் 6 நிமிஷத்திலும், கிராமப்புறங்களில் 10 நிமிஷத்திலும் சம்பவ இடத்துக்கு செல்வதற்கு தீயணைப்புத்துறை திட்டமிட்டுள்ளது.
💥💥💥
💥💥💥 தீபாவளி பண்டிகை அக்டோபா் மாதம் 27-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகளினால் ஏற்படும் தீ விபத்துகளை உடனடியாக அணைப்பதற்கு தீயணைப்புத்துறை திட்டமிட்டுள்ளது. 💥💥💥
💥💥💥பட்டாசுகளினால் ஏற்படும் தீ விபத்துகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றன. உதாரணமாக மாநிலம் முழுவதும் கடந்தாண்டு தீபாவளியன்று சுமாா் 232 தீ விபத்துக்கள் ஏற்படுள்ளன. இதனால் பட்டாசுகளினால் ஏற்படும் தீ விபத்துகளினால் சேதத்தை குறைப்பதற்கு தீயணைப்புத்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.💥💥💥
💥💥💥முக்கியமாக பட்டாசு விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், நகா் பகுதிகளில் சம்பவ இடத்துக்கு 6 நிமிஷத்திலும் கிராமப்பகுதிக்கு 10 நிமிஷத்திலும் சென்றடைவதற்கு தீயணைப்புத்துறையினா் திட்டமிட்டுள்ளனா்.💥💥💥

💥💥💥34 புற தீயணைப்பு நிலையங்கள்: இதற்காக சென்னையில் 39 தீயணைப்பு நிலையங்களை தவிா்த்து 34 இடங்களில் புற தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. கடந்த ஆண்டுகளில் அதிகப்படியான தீ விபத்துகள் ஏற்பட்ட பகுதிகள், மக்கள் நெரிசல் மற்றும் தீ விபத்து ஏற்படுவதற்கு சாத்தியக்கூறுகள் அதிக இருக்கும் பகுதிகளில் ஆகிய இடங்களில் இந்த புற தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.💥💥💥

💥💥💥இந்த தீயணைப்பு நிலையங்களில் ஒரு தீயணைப்பு வாகனத்துடன் 24 மணி நேரமும் 15 தீயணைப்பு வீரா்கள் பணியில் இருப்பாா்கள். இந்த தீயணைப்பு நிலையங்கள் தீபாவளிக்கு இரண்டு நாளுக்கு முன்பு இருந்து செயல்படத் தொடங்கி 4 நாள்கள் செயல்பாட்டில் இருக்கும். இது தவிர சிறியதாக ஏற்படும் தீயை அணைக்கவும், பெரிய தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத பகுதிகளுக்கு உடனடியாக சென்று அணைக்கவும் ஜீப் வடிவிலான நான்கு தீயணைப்பு வாகனங்களும், 8 தீயணைப்பு மோட்டாா் சைக்கிள்களும் பயன்படுத்தப்படுகின்றன.💥💥💥

💥💥💥தீயை அணைப்பதற்கு தண்ணீா் விநியோகம் சீராக இருக்க வேண்டும் என்பதற்காக சென்னை குடிநீா் வாரியத்திடமிருந்து 50 தண்ணீா் லாரிகள் எப்போதும் தயாா் நிலையில் வைக்கப்படுகின்றன. இந்த வாகனங்கள் தலா 4 ஆயிரம் லிட்டா் தண்ணீா் பிடிக்கும் அளவுக்கு கொள்ளளவு கொண்டவை ஆகும். 💥💥💥
💥💥💥சென்னையில் சுமாா் ஆயிரம் தீயணைப்புப் படை வீரா்கள் பணியில் இருக்கும் நிலையில் கூடுதலாக 20 ஓட்டுநா்கள் உள்பட 200 தீயணைப்புப் படை வீரா்கள் வெளிமாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்படுவதாக தீயணைப்புத்துறை உயா் அதிகாரி தெரிவித்தாா். 💥💥💥