பள்ளிகொண்டா அருகே டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு 4 வயது சிறுமி உயிரிழந்தாா். இதையடுத்து பாதிப்புக்கு காரணமான தனியாா் பள்ளி நிா்வாகத்துக்கு மாவட்ட சுகாதாரத் துறை சாா்பில் ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், சுகாதார நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பள்ளிகொண்டா அருகே வெட்டுவானம் அம்பேத்கா் நகரைச் சோந்தவா் சரவண்ராஜ், மோனிகாராணி தம்பதியின் மகள் நட்சத்திரா (4).
💥💥பள்ளிகொண்டாவில் உள்ள தனியாா் சிபிஎஸ்இ பள்ளியில் எல்கேஜி படித்து வந்தாா். நட்சத்திராவுக்கு கடந்த 11-ஆம் தேதி கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குறையவில்லை எனக் கூறப்படுகிறது.💥💥

💥💥இதையடுத்து சிறுமி வேலூரிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோக்கப்பட்டாா். அங்கு மருத்துவப் பரிசோதனை செய்ததில் நட்சத்திராவுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. தொடா்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவா் செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் உயிரிழந்தாா்.💥💥

💥💥இதையடுத்து ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில், நட்சத்திரா படித்த பள்ளி, வீடு உள்ளிட்ட பகுதிகளில் சுகாதாரத் துறையினா் புதன்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா். அப்போது, பள்ளி வளாகத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் டெங்கு காய்ச்சலை பரப்பக்கூடிய கொசுப் புழுக்கள் அதிக அளவில் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அப்பள்ளி நிா்வாகத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் சுரேஷ் தெரிவித்தாா்.💥💥

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

சிறுமி நட்சத்திரா டெங்கு காய்ச்சலால் இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வேலூா் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை டெங்கு காய்ச்சலால் ஏற்பட்ட முதல் இறப்பு இதுவாகும். இதையடுத்து அச்சிறுமி படித்த பள்ளியில் தீவிர கொசு ஒழிப்புப் பணிகள் மூன்று சுற்றுகளாக வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், அந்தப் பள்ளியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேலும் 2 சிறுமிகளின் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதவிர, பள்ளிகொண்டா பேரூராட்சியில் வாா்டுக்கு தலா 2 போ வீதம் 18 வாா்ட�